புது பெலன்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள ஒரு பள்ளியில், குளிர்காலங்களில் காலையிலே சென்று சகமாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னால், நெருப்பு மூட்டி, வகுப்பறைகளை சூடாக்குகிற பொறுப்பு ஒரு மாணவனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் சகமாணவர்கள் பள்ளி வந்தபோது பள்ளிக்கூடம் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே மாணவர்கள் ஓடி தீயில் மாட்டியிருந்த அந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இடுப்பிற்கு கீழ் தீயினால் வெந்துபோன சூழ்நிலையில் இருந்த அவன், “நான் எப்படியும் பிழைப்பேன்” என உறுதியாய் இருந்து மருத்துவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் உயிர்
பிழைத்தான். மருத்துவர் அவனுடைய தாயாரை அழைத்து “இவன் வாழ்நாள் முழுவதும் சக்கரம் பொருந்திய நாற்காலியில் தான் இருக்கவேண்டும்; ஏனெனில் இடுப்பிற்கு கீழாய் அவனுக்கு உணர்ச்சி இல்லை” என்றார். இதைக் கேட்ட அச்சிறுவன் தன் உள்ளத்தில் இல்லை, “நான் எப்படியும் நடப்பேன்” என உறுதி பூண்டான். ஒரு நாள் தன் தாயார் தன்னுடைய நாற்காலியை உருட்டி வெளியே கொணர்ந்தபோது, அதிலிருந்து குதித்து தரையிலே விழுந்து, ஊர்ந்து மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட வேலியருகே சென்றான். இதன் பின் ஒவ்வொருநாளும், அவ்விதமாக ஊர்ந்தான். ஒரு நாள் எழுந்து நின்றான். சில மாதங்கள் கழித்து கட்டைகளைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான். பின்பு பிடி ஒன்றும் இல்லாமல் நடந்தான். இப்பொழுது பள்ளிக்கு செல்வேன் என கூறி நடந்தே பள்ளிக்குச் சென்றான். ஓடும் ஆசையோடு, வேகமாக ஓட ஆரம்பித்தான். பின்பு அவன் நாட்களில் உலக வீதியில் ஒரு மைல் தூரத்தை வேகமாக ஓடினவன் என பெயர் பெற்றார். அவர் பெயர் டாக்டர் கிளன் கன்னிகாம்.

அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தின வசனம் நாம் குறித்திருக்கிற மனனவசனம் அவர் இருதயத்தில் எப்பொழுதும் இந்த வசனம் இருந்ததால் அவர் புது பெலன் அடைந்து செட்டைகள் அடித்து எழும்பினார். தேவன் இந்த ஆசிர்வாதத்தை நமக்கும் தர வல்லவராய் இருக்கிறார்.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40:31

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE