பத்து ஆண்டுகளுக்கு முன்..

  ஒரு கப்பல் உடைந்தது. பிரயாணிகளெல்லாம் பல இடங்களில் சிதறினர். தண்ணீரில் தத்தளித்தனர். அநேகர் மரித்து, மீன்களுக்கு  இரையானார்கள். ஒருவன் மட்டும் தப்பி, தூரத்தில் தெரிந்த தீவை நோக்கி நீந்தி வந்தான். அந்தக் தீவிலுள்ள மக்கள் அவனைக் கண்ட போது தங்கள் படகுகளை எடுத்துக் கொண்டுபோய் காப்பாற்றி, நல்ல உணவுப் பொருட்களைக் கொடுத்து, உபசரித்து மகிழ்வித்தனர்.
       மறுநாளில் அவன் அந்தத் தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அந்த மக்களிடம் கேட்டான். “நீங்கள் எல்லோரும் மிகவும் நல்லவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களைக் கெடுப்பது உங்கள் மதம்தான். மதம் உங்களை சோம்பேறிகளாக்கவில்லையா? மதம் ஒரு போதைப்பொருள் என்பது உங்களுக்குத் தெரியாதா? இயேசு கிறிஸ்துவை வணங்கி, ஏன் மூட நம்பிக்கைக் கொள்கிறீர்களா?” என்று கேட்டான்.
         அதற்கு தீவின் தலைவன் சொன்னான்: “”ஐயா, நாங்கள் மனுஷனைக்கொன்று சாப்பிடுகிற நரமாமிச பட்சினியாக இருந்தோம். பத்து ஆண்டுகளுக்கு முன் நீங்கள் இந்த தீவுக்கு வந்திருந்தால், அந்த நிமிடமே உங்களைக் கொன்று புசித்திருப்போம். ஆனால் ஒரு மிஷனெரி தன் உயிரையும் பொருட்படுத்தாமல், எங்களிடம் வந்து, இயேசுவைப் பற்றி பிரசங்கித்தார். அந்த இயேசுவே, எங்களை நல்லவர்களாக மாற்றினார். அந்த இயேசுவே எங்களது கொலை வெறி, திருட்டுத்தனம், எல்லாவற்றையும் நீக்கி, சாந்தத்தையும் அமைதியையும் தந்தார், இல்லாவிட்டால், நீர் இப்படி எங்களுடன் பேசிக்கொண்டிருக்க முடியாது” என்றான். வாயடைத்துப்போனார். அந்த மனிதன்!
     சட்டமும், சமுதாயமும் திருத்த முடியாதவர்களை, திருத்திக் காண்பிப்பது, இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்புதான்.
   “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின”(2 கொரி. 5:17)
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE