இயேசுவின் வருகைக்கு ஆயத்தமா?

ஆயத்தமா? நீ ஆயத்தமா? அன்பர்
இயேசுவின் வருகைக்கு ஆயத்தமா?

வீண்பேச்சுக்கு விலகியிரு! இல்லையேல்
வீணாய் நேரத்தைக் கடத்திவிடும்!
பண ஆசையை பறக்க விடு! இல்லையேல்
பாவத்தை உன்னிடம் அண்டவைக்கும்!
பாலிய இச்சைகள் அழைக்கும் வா என்று!
நீ அதற்கு பதில் சொல் போ என்று!
அதனால் ஆயத்தமா இரு! ஆயத்தமா இரு!

பாவத்தை அறிக்கை செய்து விட்டாயா?
பிறரின் உள்ளத்தை நற்செய்தியால் தொட்டாயா?
உத்தமனாய் இரு! உனக்கு அன்போடு சாந்த
ஆவி வரும்! பாவியெனின் பிரம்புவரும்! அடிதரும்!
அதனால் ஆயத்தமா இரு! ஆயத்தமா இரு!

ஆவியின் கனிகள் ஞாபகமிருக்கா? நினைத்துப்பார்
அவை எல்லாம் உன்னிடம் இருக்கா?
ஆசைகளை தேடாமல் ஆண்டவரைத் தேடுவோம்!
அன்புடன் இருந்து இயேசுவுடன் ஓடுவோம்!
எனினும் ஆயத்தமா இரு! ஆயத்தமா இரு!

கள்ளப் போதனையை விலக்கி
நல்லப் போதனையை பழக்கும்!
மேலே சொன்ன யாவைக்குறித்தும் ஒருநாள்
நியாயத்தீர்ப்பு நாள் இருக்கும்!
உன்னிடம் கேட்க பல்லாயிரம் வினாக்கள் இருக்கும்
அதனால் ஆயத்தமா இரு! ஆயத்தமா இரு!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE