குறைவின்றிக் கொடுப்பவர்

ஒரு முறை மாவீரன் நெப்போலியன், தன் படை வீரன் ஒருவன் சோகமான முகத்தோடிருந்ததைக் கண்டு அவனை விசாரித்த போது, அவன் தன் மகளின் திருமணத்திற்காகத் தேவைப்படும் 1000 பவுண்டுகளுக்குக்காகக் கவலை யோடிருப்பதை அறிந்து கொண்டு, நெப்போலியன் அந்தப் போர் வீரனிடம் பத்தாயிரம் பவுண்டுகளைக் கொடுத்து திருமணத்தை நடத்தச் சொன்னானாம். அந்தப் போர் வீரன் அதற்கு மறுப்புத் தெரிவித்து ”ஆயிரம் பவுண்டுகளேப் போதும் என்றானாம்”. அதற்கு நேப்போலியன் உனக்கு வேண்டுமானால் ஆயிரம் பவுண்டுகள் பெரிதாயிருக்கலாம் ஆனால் எனக்கு அது மிகவும் குறைவானது. எனவே பத்தாயிரம் பெற்றுக்கொள் என்றானாம்.

ரோமர் 8:32. தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி? என்று வாசிக்கிறோம். சங்கீதம் 34:10, சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” என்கிறது.

குறைவின்றிக் கொடுக்கிற நம் தேவனிடம் எதுவானாலும் விசுவாசத்தோடு கேட்கும்போது அவர் நமக்கு நிச்சயம் கொடுப்பார். நமக்குப் பெரியதாகத் தோன்றுபவை கூட அவருக்கு மிகவும் சிறியதே. வார்த்தைகளினால் உலகத்தை உண்டாக்கின அவருக்கு நம்முடைய தேவைகளைச் சந்திக்க நிச்சயம் முடியும். நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாகச் செய்கிறவர் என்று தேவனை வேதம் அழைக்கிறது. உங்கள் தேவைகளை அவர்முன் வைத்து கேளுங்கள். கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான் என்று அவரே கூறியிருக்கிறார். ஆகவே அவரிடம் விசுவாசத்தோடு நாம் எதையாகிலும் கேட்டால் நிச்சயம் தருவார். உங்கள் தேவைகளையும் கஷ்டங்களையும் அவரிடம் சொல்லுங்கள். அவர் ஒரு அன்பானத் தகப்பனைப் போன்ற இரக்கமுடையவர். நாம் கேட்பதற்கு அதிகமாகவே இரக்கமுடையவர். நாம் கேட்பதற்கு அதிகமாகவே நம்மை ஆசீர்வதிக்க அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

சகல வித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும்……. கட்டளையிடு. 1தீமோ. 6:17

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE