தோற்றத்தில் தீர்ப்பு கூடாது..

ஒரு விவசாயி தன் வீட்டுத் தோட்டத்தில் நிறைய ஆப்பிள் மரங்கள் நட்டிருந்தார். ஒரு கனி காலத்தில் தன்னுடைய ஒரு நண்பரிடம் “எங்கள் வீட்டில் நிறைய ஆப்பிள் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. நீங்கள் வந்து எவ்வளவு வேண்டுமென்றாலும் பறித்துக் கொள்ளலாம்”என்று கூறினார். ஆனால் நண்பர் வரவில்லை. இரண்டு மூன்று முறை அழைத்தும் தன்னுடைய நண்பர் ஆப்பிள் பழங்களை எடுத்துச்செல்ல வராததால் சற்று வருத்தமுற்று அவரிடம் காரணம் கேட்டார். நண்பர் அவரிடம் “நான் உங்கள் வீட்டிலுள்ள ஆப்பிள் பழத்தில் ஒரு சிலவற்றை சாலை ஓரத்தில் கிடந்தபோது கண்டெடுத்துச் சாப்பிட்டுப் பார்த்தேன். யாவும் மிகவும் கசப்பானவைகளாக இருந்தன. ஆகவேதான் பழங்களை எடுத்துச் செல்ல வரவில்லை” என்று கூறினார். அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. ஆகவே அவர் நண்பரிடம் “உங்கள் தீர்ப்பு சரியானதல்ல. சாலையில் செல்லும் சிறுவர்கள் ஆப்பிள் மரங்களின் மீது கல்வீசுவதால், ஓரத்தில் கசப்பான ஆப்பிள்களை நட்டு வைத்தேன். தோட்டத்தினுள் நல்ல இனிப்பான ஆப்பிள்கள் உள்ளன” என்று கூறினார்.

சிலர் பார்ப்பதற்கு மிகவும் கொடூரமானவர்களாகத் தோற்றமளிப்பார்கள். அண்டைவீட்டுக்காரர்கள் இவர்களைக் கண்டாலே பயந்து விலகி விடுவார்கள். இவர்களிடம் பேசி, பழகி இவர்களின் உண்மையான குணத்தைக் கண்டுபிடித்தால் அவர்கள் அன்பும், கனிவும் நிறைந்தவர்கள் என்று அறிந்துகொள்ள முடியும். அதைச் செய்யாமலே இவர்கள் கொடூரமானவர்கள் என்ற பட்டத்தைக் கட்டி விடுகிறோம். இது மிகவும் தவறு. வெளிப்புறத் தோற்றத்தால் தீர்ப்பு செய்யக்கூடாது.

உங்கள் அயலகத்தார் அல்லது உங்களோடு வேலை செய்கிறவர்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு தீர்ப்பு செய்யாமல் தீரவிசாரித்து அவர்களைக் குறித்து அறிவது அவசியம். அதுவே நாம் செய்யும் சரியான தீர்ப்பு ஆகும்.

”மனுஷன் முகத்தை பார்ப்பான் கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” 1 சாமுவேல் 16:7

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE