மகா அலெக்ஸாண்டரின் அரண்மனையின் மிகவும் புகழ்பெற்ற ஓவியன் இருந்தான். அவனுக்கு சக்கரவர்த்தியின்மேல் அளவில்லாத அன்பு. அவன் பல ஆண்டுகளாக இடைவிடாது முயிற்சித்து சக்கரவர்த்தியின் ஓவியம் வரைந்தான்
சக்க்ரவர்த்தியின் முகத்தில் காணப்பட்ட ஒரு பெரிய தழும்பு அந்தப் படத்தின் அழகை சற்றுக் குறைத்தது. எனவே அவன் மீண்டும் இரவு பகலாக பாடுபட்டு, அந்த தழும்பு தெரியாமல் சக்கரவர்த்தி தன் கையை முகத்தில் வைத்து ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதைப்போல மிக அழகாக வரைந்து முடித்தான்
சக்கரவர்த்தி அந்தப் படத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்தார். ” ஓவியனே அந்த வீரத்தழும்பு எங்கே?” என்றார். அவன் பணிவோடு’ ராஜாவே, அதை என் அன்பு மூடிவிட்டது என்று பதில் சொன்னான்.
ஆம், அன்பு திரளான பாவங்களை மூடும். அன்பற்ற சமுதாயம் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும், கடிந்துகொள்ளும், சிறிய குற்றத்தையும் பெரிதாக எண்ணி வாழ்க்கையை நரகமாக்கும்..
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது இறுமாப்பாயிராது. 1 கொரி 13:4