நாம் சோதிக்கப்படும் போது “என்னுடைய வழி, தேவனுடைய வழி” என்ற இருவழி சந்தியிலே நிற்கிறோம். ஆனால் “என்னுடைய வழி” என்ற பாதையில் போகவே விரும்புவோம். சோதிக்கப்படுதல் பாவமல்ல. இயேசுவே சோதிக்கப்பட்டார். சோதனைக்கு இடங்கொடுத்து வேண்டுமென்றே என்னுடைய வழியில் செல்லத் துணியும்போது அது பாவமாகிறது.
என் தலையின் மேல் பறவைகள் (சோதனைகள்) பறப்பதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் அவை என் தலையில் கூடுகட்டுவதை என்னால் தடுக்க முடியும் என்கிறது சீனப் பழமொழி.
சோதனைகள் வரும்போது நம்மை ஊக்கப்படுத்தும் இவ்வசனத்தை என்றும் மறவாதே . “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்க்கு அவர் இடங்கொடாமல் சோதனையைத் தாங்கத் தக்கதாக சோதனையோடு கூட அதற்க்கு தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” 1 கொரிந்தியர் 10:13