தேவனின் ஞானம்

பேராசியர் நியூக்லிட் தன் பேராசிரிய நண்பர்களுடன் எகிப்து நாட்டிலுள்ள பிரமிடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவர் தெய்வபக்தியுடையவர், அந்த சமயத்தில் ஒரு நண்பர், “நியூக்லிட், எல்லாரும் உங்களை அறிஞர் என்று சொல்லுகிறார்கள். இந்த பிரமிட் சரியாக எவ்வளவு உயரம் என்று சொல்லு முடியுமா? உங்களிடம் தான் அளவு நாடா உள்ளதே” என்றார். யாராலும் பிரமிட் மேல் ஏறி உயரத்தைக் கண்டு பிடிக்க முடியாது, ஏனென்றால் அதன் அடிப்பகுதி மிகவும் அகலமாகவும், போகப் போகக் குறுகியும் செல்கிறது. அங்கிருந்து நாடாவைத் தொங்கவிட்டு அளக்க முடியாது என்பது நியூக்லிட்டுக்குப் புரிந்தது. எல்லோரும் அவரைப் பார்த்து சிரித்தார்கள். உடனே நியூக்லிட், “நண்பர்களே, இயலாத செயல் என்று எதுவும் இல்லை. எதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது என்றார். பிறகு அவர் தன் கையிலிருந்த அளவு நாடாவினால் பிரமிட்டின் நிழலை அளந்தார். அதைக்குறித்துக் கொண்டார். பிறகு தன் நிழலை அளந்தார். தன் நிழலையும் தன் உயரத்தையும் வைத்துக் கணக்கிட்ட அவர் பிரமிட்டின் உயரத்தை கணக்கிட்டுச் சொன்னார். நியூக்லிட் சொன்னது பிரமிட்டின் துல்லியமான உயரமாக இருப்பதைக் கண்டு, அவருடன் வந்த பேராசிரியர்கள் யாவரும் வியப்படைந்து அறிஞர் நியூக்லிட்டைப் பாராட்டினார்கள்.

தேவனை நம்பக் கூடிய அவருடைய பிள்ளைகளுக்கு ஆண்டவர் எதிர்பாரத விதமாக வியக்கத்தக்க விதத்தில் அதிக ஞானத்தையும், அறிவையும் கொடுக்கிறார். உங்களை ஏதாவது கேள்விகள் கேட்டு விசுவாசத்திலிந்து வழிவிலகச் செய்ய யாராகிலும் முயற்சி செய்கிறார்களா? மௌனமாக ஜெபியுங்கள், அவர்களுக்கு ஏற்ற பதிலைக் கொடுக்க தேவன் உதவி செய்வார். பேசுகிறவர்கள் நீங்களல்ல, உங்களிலிருக்கிற பரிசுத்த ஆவியானவரே பேசுகிறார் என்று அவர் வாக்களிக்கிறார். ஜெபத்தால் ஜெயம் பெறமுடியும் என்பதை எத்தனையோ பக்திமானகள் நிரூபித்திருக்கிறார்கள். விசேஷமாக விசுவாசத்தைக் குறித்து கேள்விகள் கேட்டு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால் தேவன் நிறைந்த ஞானத்தை அருள்வது நிச்சயம்.

உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவு உள்ளவனாக இருக்கிறேன். சங்கீதம் 119:99

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE