அவருக்குள் ஞானம்

இந்த பூமியில் பதினைந்து இலட்சத்துக்கும்(15,00000) மேற்பட்ட பூச்சியினங்கள் வகை வகையாகப் படைக்கப்பட்டிருப்பது ஆண்டவரின் அளவற்ற ஞானத்தைச் சுட்டிக்காட்டுகிறது.சாதாரணமாகக் காணப்படும் தேனீக்கள் தன் கூட்டில் ஒரு சிறிய பட்டணத்தையே வடிவமைத்துள்ளது.தேன் வைக்கப்படுவதற்காக 10,000 சிறு அறைகளும், இராணித் தேனீக்காகச் சிறப்பானதொரு பெரிய அறையும், கூட்டுப்புழுக்கள் வளர்வதற்காக 12,000 சிறு அறைகளும் கட்டப்பட்டுள்ளன.
பிரெஞ்சு நாட்டு அறிவியலாளரான ரேனே அன்டானி பெர்சால்ட்டி (1719) ஒரு தேனீயின் கூட்டை ஆய்வு செய்தார். அதில் ஒருவகையான அட்டையை ஒட்டிச் செய்யப்பட்டதுபோலத் தோன்றியது. தொடர்ந்து ஆய்வு செய்தபோது, கூட்டுக்குத்தேவையான பெரும்பாலான பொருட்கள் மர நாரிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இந்த ஆய்வின் விளைவாக முதன் முறையாக மரக்கூழிலிருந்து வெற்றிகரமாகக் காகிதம் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. என்றாலும் வரலாற்றின் துவக்கத்திலேயே நம் தேவன் ஒரு சின்னஞசிறு தேனீக்கு இந்த ஞானத்தை கொடுத்திருந்தார். இந்த உலகத்தில் இப்படிப்பட்ட கோடிக்கணக்கான அற்புதங்களை நாம் காணமுடியும். திறந்த மனதோடும், தேவனை நாடுகின்ற இருதயத்தோடும் இதைக் காணும் எவரும் சர்வ ஞானமுள்ள சிருஷ்டிகர் ஒருவரே அனைத்தையும் படைத்தார் என்று கண்டுகொள்ள முடியும். முழு இருதயத்தோடு நாம் அவரை ஆராதிப்பதற்கு அவர் தகுதியுடையவர்

அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. கொலோ 2.3

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE