Tamil Christian Quotes

ஆண்டவரை தங்கள் சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே அனைவரும் வேதத்தை நேசித்து வாசிப்பது உண்டு. பலர் பலவிதமாக வேதத்தை நேசிப்பதை தொடரும் நேரத்தில், சில எழுத்தாளர்கள், சில பிரபலமானவர்கள் வேதத்தை இவ்வாறாக கூறியிருக்கின்றனர். இந்திய தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவர்கள் இவ்வாறாக கூறியிருக்கின்றார்: “என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டு வந்த புத்தகமென்றால் பரிசுத்த வேதாகமே” என்று. விக்டோரியா ராணியிடம் ஒருவர் இவ்வாறாக கேட்டாராம், “ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் மகிமைக்கு காரணம் என்ன?” என்று. அதற்கு விக்டோரியா மகாராணி ஒரு வேதாகமத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, “காரணம் இந்த பரிசுத்த வேதாகமே” என்று சொன்னார்களாம். மிகப் புகழ் பெற்ற விஞ்ஞானி (சூரியனை பூமி சுத்துவதை முதன்முறையில் கண்டுபிடித்தவர்) கலிலியோ கலில்சி இவ்வாறாக கூறுகின்றார்: “பரிசுத்த வேதாகமம் பரலோகம் செல்லும் வழியை காட்டுகின்றது” என்று. ஆங்கிலேய புகழ்பெற்ற எழுத்தாளர் சார்லஸ் ஜான் ஹபாம் டிக்கன்ஸ் இவ்வாறாக கூறியிருக்கிறார்: “புதிய ஏற்பாடு ஒன்றே மனிதவர்க்கத்திற்கு கொடுக்கப்பட்ட உலகினிலேயே மிகசிறந்த புத்தகமாகும்” என்று. ஸ்காட்லாந்து எழுத்தாளர் ஜார்ஜ் மேக் டொனால்ட் இவ்வாறாக கூறியிருக்கிறார்: “பரிசுத்த வேதாகமம் உலகினிலே எனக்கு விலையேறப்பெற்ற ஒன்றாகும். ஏனெனில் அது எனக்கு இயேசுகிறிஸ்துவின் வரலாற்றைக் கூறுகின்றது” என்று. ஐக்கிய அமெரிக்காவின் 18வது ஜனாதிபதி ஹிராம் உள்யஸ்ஸஸ் க்ராண்ட் இவ்வாறாக கூறுகின்றார்: “பரிசுத்த வேதாகமத்தை உறுதியாய் உங்கள் இருதயங்களில் பதித்து, அவைகளை உங்கள் வாழ்க்கையில் நடைமுறையாக்குங்கள். இவைகளே உங்களை நல்ல நாட்டு மக்களாக, தலைவர்களாக ஏற்படுத்தும்” என்று. பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபர்டே இவ்வாறாக கூறியிருக்கின்றார்: “பரிசுத்தவேதாகமம் ஒரு புத்தகம் அல்ல, மாறாக அது தன்னை எதிர்கின்றவர்களை ஜெயம் கொள்கின்ற ஜீவனுள்ள சிருஷ்டி” என்று. பிரான்ஸ் நாட்டின் மிகசிறந்த எழுத்தாளர் இவ்வாறாக கூறுகின்றார்: “இங்கிலாந்தில் இரண்டு புத்தகங்கள் உண்டு. ஒன்று பரிசுத்தவேதாகமம் மற்றும் சேக்ஸ்பியர் கவிதைகள். சேக்ஸ்பியரை உருவாக்கியது இங்கிலாந்து, ஆனால் இங்கிலாந்தை உருவாக்கியது பரிசுத்தவேதாகமே” என்று. புகழ்பெற்ற இங்கிலாந்து கவிஞர் ஆல்ஃபிரட் டென்னிசன் இவ்வாறாக கூறுகின்றார்: “பரிசுத்தவேதாகமம் வாசிப்பது, தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்வதாகும்” என்று. நம் கையில் இருக்கும் இந்த பரிசுத்தவேதாகமம் எவ்வளவு விசேஷித்தமானது என்று நமக்கு தெரியும். “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது” என்றும் “வேதம் என் மனமகிழ்ச்சி, வேதமே சத்தியம்” என்றும் வேதத்தில் பார்க்கின்றோம். சோர்ந்துபோகும் நேரத்தில், காலத்தின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை உயிர்ப்பிக்கிறது இந்த பரிசுத்தவேதாகமே. ஆதலால் வேதாகமத்தை நேசித்து அதன் மகத்துவங்களை புரிந்துகொள்வோம்!

எளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள்.

தீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக இருப்போம்.

கண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும்

ஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்பது நல்லது. அதற்கு முன் ஆசீர்வாதம் தங்க தகுதியையும் ஆராய வேண்டும்

ஜெபம் காரியங்களை மாற்றுகிறது! – Anonymous

உதட்டின் முனையிலிருந்து வருவது ஜெபமல்ல, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருவதே ஜெபம்! – Anonymous

“When life knocks you on your knees, your in the perfect position to pray! – Anonymous

 “The fewer the words, the better the prayer” –  Martin Luther

“Groanings which cannot be uttered are often prayers which cannot be refused.” – Spurgeon

“It is possible to move men, through God, by prayer alone” – Hudson Taylor

“Prayer is not asking. It is a longing of the soul. It is daily admission of one’s weakness. It is better in prayer to have a heart

without words than words without a heart.” – Gandhiji

“Do not pray for an easy life, pray for the strength to endure a difficult one” –  Bruce Lee 

Prayer is not asking. Prayer is putting oneself in the hands of God, at His disposition, and listening to His voice in the depth of our hearts.” –  Mother Teresa

“Any concern too small to be turned into a prayer is too small to be made into a burden.”- Corrie Ten Boom

“The Simple Path Silence is Prayer Prayer is Faith Faith is Love Love is Service The Fruit of Service is Peace”- Mother Teresa

“Go where your best prayers take you.”- Frederick Buechner

Never forget the three powerful resources you always have available to you: love, prayer, and forgiveness.- H. Jackson Brown, Jr

சரியான விசுவாசம் பதில் பெறாமல் போவது இல்லை.

மனிதர் பலவற்றையும் திட்டமிடுவார்கள். தேவனோ செயல்ப்படுத்துவார்.

நமது பாதையின் முன்னே இருள் குடியிருப்பதாகத் தோன்றினாலும் நமது பாதையின் மேலே

எப்போதும் பிரகாசம் உண்டு

Give me the Love that leads the way The Faith that nothing can dismay, The Hope no disappointments tire, The Passion that’ll burn like fire Let me not sink to be a clod Make me Thy fuel, Flame of God.” – Amy Wilson Carmichael

“The greatest thing anyone can do for God or man is pray.” – S.D. Gordon

“One should never initiate anything that he cannot saturate with prayer.”

சிறிய காரியங்களில் உண்மையாக இருப்போரை பரலோகம் சிறியவராக இருக்க அனுமத்திக்காது.

பாவம் தரும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்ப சிறகடித்துப் பறந்தாலும் முடியாது.

பாவங்களின் படையெடுப்புகளை வெட்டி வீழ்த்தியபடித்தான் பரலோகப் பாதையில் முன்னேற முடியும்

இரக்கமுள்ள தேவன் இல்லையெனில் உலகம் அக்கினி கடலாகியிருக்கும். நீதியுள்ள தேவன் இல்லையெனில்

உலகம் அராஜக நரகமாகியிருக்கும்.

God does nothing except in response to believing prayer. – John Wesley

வெறுமையும் இயலாமையுமே தேவ அற்புதங்களின் நிகழ்விடங்கள்.

Loading...