மன அழுத்தத்திற்கு ஒரு மருந்து.

மன அழுத்தம் மனிதனை முடமாக்கி அல்லது மன நல நோயாளியாக மாற்றிவிடுகிறது, தன் பிரச்னனையை தாங்கிக் கொள்ள முடியாதவன், தப்பிக்க அநேக வழிகளை தேடுகிறான், ஆனால் அந்த வழிகள் அவனை வெற்றிக்கு நேராய் வழிநடத்துகிறத என்பதை யோசிக்க வேண்டிய விஷயமாய் இருக்கிறது.

மன அழுத்தம் என்றால் என்ன?

மன அழுத்தம் என்பது தன் பிரச்சனைகளை அதாவது தன் வேலையை குறித்து, குறிக்கோளைக் குறித்து, குடும்பத்தைக் குறித்து, படிப்பை குறித்து உடலிலும் மனதளவிலும் சூழ் நிலையாலும் ஏற்படும் ஒரு விபரீத மாற்றம் தான் மன அழுத்தம். இந்த உலகத்தில் மன அழுத்தம் இல்லாத மனிதனே இல்லை என்று சொல்லலாம், ஆறு அறிவு உள்ள மனிதன் ‘ஏன்’ என்று கேட்கும் திறன் உடையவன், அந்த ‘ஏன்’ என்ற வார்த்தைதான் மனிதனை மிருகங்களிடமிருந்து சற்று வேறுபட்டவன் என்று பிரித்து காண்பிக்கிறது. (REASONING POWER)ரீஸனிங் பவர் மனிதனுக்கு குறையும்போது அவனை மனநோயாளி என்று கூறுவார்கள், மனநோயாளியாய் இருப்பவன் தன்னை சுற்றி நடக்கும் எந்த நிகழ்வையும் ஏனென்று கேட்க மாட்டான்.

மேல நாட்டினர் செய்யும் உடற்பயிற்சி அல்லது இந்தியாவின் யோகா, சீனாவின் குங்ஃபூ, கொரியாவின்  Teak Wong do,இப்படி ஒவ்வொரு நாட்டிற்க்கும் வித்தியாசமான உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் உன்டு, இவைகளெல்லாம் மன அழுத்தத்தை குறைக்கும் என்றால் இதில் எந்த வகை பயிற்சியை நாம் பின்பற்றலாம். இந்த உடற்பயிற்சிகள் மற்றும் தியானப் பயிற்சிகள் அனைத்தும் ஒரு இல்லுஷன் அதாவது உண்மை போல் தெரியும் ஆனால் உண்மை இல்லாத கானல்நீர்.

மன அழுத்தத்தில் இருந்து விடுதலைபெற தற்கொலை ஒரு தீர்வு ஆகாது ஏனென்றால் ஒரு முறை மன அழுத்தத்தால் ஏற்பட்ட தற்கொலை முடிவு, அவனுடைய குடும்பத்தார் அனைவரையும் மனஅழுத்தத்தால் தள்ளி விடும், மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற மது அருந்துவதும் ஒரு தீர்வு அல்ல. ஐயோ! யாருக்கு வேதனை, யாருக்கு துக்கம், யாருக்கு சண்டைகள், யாருக்குப் புலம்பல், யாருக்கு காரணமில்லாத காயங்கள், யாருக்கு ரத்தம் கலங்கின கண்கள், மதுபானம் இருக்கும் இடத்தில் தங்கி தரிபவர்களுக்கு கள்ளச்சாராயத்தை நாடுகறவர்களுக்கும் தானே, என்று வேதம் கூறுகிறது, குடிப்பவர்களுக்கு இன்னும் மன அழுத்தம் கூடுகிறது, ஆகையினால் மன அழுத்தம் குறைக்க மன மகிழ்ச்சி என்னும் நல்ல ஒளஷதம் தேவை, மனமகிழ்ச்சி எந்த ஒரு பெரிய வியாதியையும் வெகுவாக குறைத்து விடும்.

சகோதர சகோதரிகளே இந்த மன மகிழ்ச்சியைத் தருபவர் ஒருவர், அந்த ஒருவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர். உன் நம்பிக்கை கர்த்தர் மேல் இருக்கும்படி இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன், உன் நம்பிக்கை வீண்போகாது, ஏனென்றால் யோவான் 14:19 சொல்கிறது நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைத்தீர்கள், இயேசு கிறிஸ்து நமக்கு முன்பு வாழ்ந்து காட்டி நமக்காக மரித்து இன்றும் உயிரோடு இருக்கிறார், ஆவியான தேற்றரவாளன் நமக்குத் தரப்பட்டு இருக்கிறார், இந்த உலகத்தில் அநேகர் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கிறார்கள்,
ஆவியானவரின் வேலையே உங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி அதை திருத்தச் சொல்லுவார், அதுமட்டும் அல்ல அவர் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் உதவியும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார், இதனால் மனஅழுத்தம் குறையும் அந்த ஆவியானவருடன் தினமும் உங்கள் உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள், அதற்காக வேதம் வாசிப்பதும் ஜெபிப்பதும், ஆலயத்திற்குச் செல்வது மிக அவசியமான வழிமுறைகளாகும். ஆமென்.

Author: Mrs. Selvia

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE