ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, கருப்பின மக்களின் பூமி. நாகரீகம், கலாச்சாரம், போன்ற வளர்ச்சியில் இன்னும் பின்தங்கியுள்ள நாடு தான் ஜாம்பியா. அடிமைத்தன வாழ்க்கை, மூடநம்பிக்கை அரசியல் காட்புணர்வுகளால் மக்கள் அழிவுக்கு நேராய் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நம் இந்தியாவிடம் ஒப்பிடும்போது 200 ஆண்டுகள் பின்தங்கியுள்ளன. மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், கல்வி அறிவு, போக்குவரத்து போன்ற எந்த ஒரு முன்னேற்றத்திலும் உலக நாடுகளின் வரிசையில் மிகவும் கீழே உள்ள நாடு.
மனிதர்கள் காட்டுமிராண்டிகளாகவும், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஆகவும், முன்னோர்களின் மூட நம்பிக்கையிலும், போதை வஸ்துக்களின் பிடியில் இன்றும் பெரும் பகுதியான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்க தேசத்தின் முதல் மிஷனெரி, இயேசுவின் நற்செய்தியை ஆப்பிரிக்க காடுகளுக்குள் சுமந்து சென்றவர், இருளாய் இருந்த அந்த பூமியில் இயேசுவின் ஒளியை ஏற்றியவர், இயேசுவை அறிவிக்க வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் பற்றி எரிந்துகொண்டிருந்தது, 1873 ஆம் ஆண்டில் அவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
ஒரு தேசம் இரட்சிக்கப்பட வேண்டும் என்றால் மிஷனெரிகளின் பங்கு அதிகம். இன்றும் பல ஆயிரம் மிஷனரிகள் ஆப்பிரிக்காவில் கர்த்தரின் ஊழியத்தை மிகவும் பாரத்தோடு செய்து வருகிறார்கள்.
அதில் நம் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாம் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரும் ஒருவர் டேவிட் லிவிங்ஸ்டனிடம் இருக்கும் அதே தரிசனம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்ற அதே எண்ணம் கொண்டவர், இந்த சாம் டேவிட் லிவிங்ஸ்டன்.
மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர், சபை போதகரான அவருடைய தகப்பனார் சாம் டேவிட் லிவிங்ஸ்டனை கர்த்தருடைய ஊழியத்திற்கு அற்பணித்தார், மதுரை ஏ.ஜி வேதாகமக் கல்லூரியில் தன்னுடைய போதகர் படிப்பை முடித்தார், நான் ஒரு மிஷனெரியாக வேண்டும் என்ற ஒரே தரிசனத்தில் தன்னுடைய ஊழிய வாழ்க்கையை ஆரம்பித்தவர், இன்று ஆப்பிரிக்காவில் மிஷனரியாக இயேசுவின் சுவிசேஷத்தை அறிவித்து வருகிறார்.
ஜாம்பியாவில் உள்ள மிவினிலுங்கா Mwinilunga என்ற பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தை மிகவும் உண்மையாய் செய்து கொண்டு வருகிறார். அவருடைய களப் பணி மிகவும் கடினமானது, ஆபத்தானதும் கூட. தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் கர்த்தருக்கென்று ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார். அவருடைய ஊழியப் பணி சிறக்க ஜெபித்துக் கொள்ளுங்கள்.
அவருடைய FaceBook Link: https://www.facebook.com/delhisam