“நாங்கள் எங்கள் நம்பிக்கையை சர்வவல்லவரின் கரங்களில் வைக்கிறோம்” என்று டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்க ஜனாதிபதி கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஈஸ்டர் உரையில் தேவனுடன் நமது தனிப்பட்ட உறவில் பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

ட்ரம்ப் பைபிளிலுள்ள வேதவசனங்களை மேற்கோள் காட்டி: “ஏசாயா இந்த வார்த்தைகளை எழுதினார்: “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” இருள் பூமியை மூடுகிறது ஆனால் கர்த்தர் உங்கள் மீது எழுகிறார், அவருடைய மகிமை உங்கள் மீது தோன்றுகிறது ஏனென்றால் கர்த்தர் உங்களுக்கு நித்திய ஒளியாக இருப்பார்.

நம் தேசம் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுகையில், அமெரிக்கர்கள் ஜெபத்தின் சக்தியை நம்புகிறார்கள் என்பதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். சர்வவல்லமையுள்ள கடவுளின் கைகளில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம் என்று கூறினார்

மறுபுறம், கோவிட் 19 இலிருந்து அமெரிக்காவில் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 100,000 என்ற கனிப்பை விட “கணிசமாகக் குறைவாக” இருக்கும் என்று டிரம்ப் கூறினார் .

சனிக்கிழமை அதிகாலை நிலவரப்படி, உலகளவில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் 19 பாதிக்கப்பட்டுள்ளனர் 103,257 இறப்புகளுடன் இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் எண்ணிக்கை 501,615 ஆக இருந்தது, 18,777 பேர் இறந்தனர்.

இந்தியத் தேசத்திலும் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 8,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்கள் 273, தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவர்கள் உயிர்களைக் காப்பாற்றப் போராடுகிறார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் உலக மக்களுக்காகவும் நம் சொந்த தேசத்திற்காகவும் கர்த்தரிடத்தில் மன்றாடுவோம். நம் தேவன் சர்வவல்லவர், அவருடைய கரங்களிலிருந்து நமக்கு நிச்சயம் ஆசீர்வாதம் வரும் என்று நம்பிக்கையோடு இருப்போம். வல்லரசானாலும் வல்லவரின் கரம் தான் நம் நம்பிக்கை. ஆமென்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE