மிஷனரிகளின் கல்லறைத் தோட்டம் என்று அழைக்கப்படும் பீகாரில் 13 வருடங்களாக மிஷனரியாக ஊழியம் செய்யும் பாஸ்டர்.ஸ்டிபன்.

இந்தியாவில் மிஷனரிகளின் கல்லறைத் தோட்டம் என்று அழைக்கப்படும் பீகார் மாநிலத்தில் மிஷனரி ஊழியம் செய்த பல மேலை நாட்டினர் திரும்பி அவர்கள் நாட்டிற்கு போனதே இல்லை, குறிப்பாக வில்லியம் கேரி ஸ்ரீராம்புர்-இல் தன் வாழ்க்கையின் கடைசி மூச்சை நிறுத்திக் கொன்டார். 9 ஜூன் 1833இல் அவருடைய சரீரம் இன்று செராம்பூர் என்று அழைக்கப்படும் ஸ்ரீராம்புர் ஊரில் அடக்கம் பண்ணப்பட்டது, இன்று அவருடைய கல்லறை மேற்குவங்கம் மாநிலத்தில் இருந்தாலும் அன்று அவை பீகாருக்கு அடங்கிய பிராந்தியமாகும்.

அவரைப் போன்று பல நூற்றுக்கணக்கானோர் ஊழியத்திற்காக வந்து மரித்துப் போன இடம்தான் இந்த பீகார், அவர்கள் மரிக்க மூன்று முக்கிய காரணமாக இருந்தது
1. சீதோஷ்ண நிலை
2. மாற்றுக் கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் நே
3. மனச்சோர்வு
இம்மூன்றும் இன்றுவரை மிஷனரிகளுக்கு அதுவும் நேரிடையாக மக்கள் மத்தியில் எந்த சமூகப் பணியிலும் இல்லாமல் சுவிசேஷத்தை மட்டும் கொண்டு செல்லும் ஊழியத்திலும், சபை என்று ஒன்றை உருவாக்குவதிலும் மிகவும் கடினமான சவாலாக இருந்து வருகிறது, ஊழியர்கள் அதிகம் எழுப்பப்பட வேண்டிய ஒரு மாநிலம் பீகார், அதேநேரத்தில் அனேக மிஷனரிகள் வந்து மாநிலத்தை பார்த்துவிட்டு தன்னால் முடியவில்லை என்று விட்டுச்செல்லும் இடமும் பீகார் தான், 12 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலம் புத்த மதம், ஜைன மதத்தின் பிறப்பிடமாகவும், ராமாயணம், மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளின் பிறப்பிடமாகவும் இருக்கிறது ஒட்டுமொத்தமாக சொல்லப் போனால் ஏதோ ஒரு வகையில் 12 கோடி மக்களும் மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்கள். வரலாற்றில் இடம்பெற்ற சந்திரகுப்த மௌரிய, பாடலிபுத்திரம் அசோகா வாழ்ந்த இடமும் இந்த பிகர் தான். ஆனால் இயேசுவையும் அவருடைய நற்செய்தியையும் கேட்காதவர்களும் அதை அறியாதவர்களுமாய் இருக்கிறார்கள்

இந்நாட்களில் தேவன் தமிழ்நாட்டிலிருந்து மிஷனரிகளை இம்மாநிலத்தின் களப்பணியில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார், அதிலே போதகர் ஸ்டீபன் என்ற பேயதேவன், ஒரு விவசாயின் மகன் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தார், தன்னுடைய பத்தாம் வகுப்பு வரை இயேசு என்று கிராமத்தில் சுவிசேஷத்தை அறிவிக்க வருபவர்களை கிண்டல் கேலி செய்து அவர்கள் மனம் மிகவும் புண்படும்படி நடந்து கொள்வார், அது மட்டுமல்ல தன்னுடைய கிராமத்தில் குட்டி தாதா (DON) வலம் வந்தார், ஆனால் இவர் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் வந்தது இயேசு இரட்சித்தார், பவுலை இரட்சித்தது போல, தன் வாழ்க்கையில் இருந்த தீயவழிகளில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தேவன் காட்டும் வழியில் நடக்க ஆரம்பித்தார். தனது கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ஊழியம் செய்ய வேண்டும் என்ற தரிசனத்தில் வேதாகம கல்லூரியில் சேர்ந்தார், அப்போது விடுமுறை ஊழிய பயிற்சிக்காக உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோ விற்கு ஒரு குழுவாக அனுப்பப்பட்டார், வட மாநில மக்களின் நிலைமையை பார்த்து இயேசு என்னும் இரட்சகர் இவர்களுக்குத் தேவை என்று அறிந்து, தன்னை ஒரு மிஷனரியாக அர்ப்பணித்தார்.

பீகார் மாநிலம் பாகல்பூர் என்ற பட்டணத்தில் சுமார் 13 வருடங்களாக மிஷனரியாக ஊழியம் செய்து வருகிறார். அனேக போராட்டங்கள் பிரச்சனைகள் மத்தியிலும் இன்று ஆண்டவரின் பணியை மிகவும் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார் இன்று அதே பட்டணத்தில் சபை கட்டுமானப் பணியும் தொடங்க இருக்கிறார் நண்பர்களே வடமாநிலங்களுக்கு ஜெபிப்போம் ஊழியம் செய்பவர்களின் பாதுகாப்பிற்காக தேவைக்காக ஜெபிப்போம்.

Contact: Facebook

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE