Biography சகோதரி. சாராள் நவரோஜி

சகோதரி. சாராள் நவரோஜி

இவர் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளை. இவரது தந்தை திரு.சாலமோன் ஆசிர்வாதம் ஒரு Violin வித்வானகவும்,கர்நாடக இசை ஆசிரியராகவும் இருந்தார். தனது தந்தையிடம் இவர் முறையாக இசை பயின்றார். “நவரோஜி” என்பது கர்நாடக இசையில் ஒரு ராகம்.அதை இவரது தந்தை இவருக்கு பெயராக சூட்டினர். இவரது 21-வது வயதில் Mission பணிக்காக இலங்கை செல்ல வேண்டியதாக இருந்தபோது, அதற்காக தனுஷ்கோடி செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்திருந்தபோது, தன்னை வழியனுப்ப தனது தயார் வருவார் எனக் காத்திருந்தார். நேரம் கடந்து போனதே தவிர,தயார் வரவில்லை இந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல் தான் என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும்,மறவாமல் நேசிக்கும் தேவனை மையபடுத்தி எழுதப்பட்ட பாடல் இது. இந்த பாடல் எழுதபட்ட வருடம் 1960.

இவர் சென்னை Electriccity board – இல் பணியாற்றி கொண்டிருந்த போது ஒரு தெய்வீக தரிசனத்தைக் கண்டு, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியப் பணியை தொடங்கினர். இவர் உயர் நிலை பள்ளியில் படித்துகொண்டிருக்கும் போது UN அமைப்பு நடத்திய ஒரு பாட்டு போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார். இவரது பாடல்களில் இசை,இலக்கணம் (பல்லவி,அனுபல்லவி மற்றும் சரணங்கள்) முறையாக கடைபிடிக்கப்பட்டது. இசைத்தகடு தயாரிப்பில் புகழ் பெற்ற நிறுவனமான HMV, இவரது பாடல்களை தயாரித்து வெளியிட்டு வந்தது.

All India Radio இவருடைய பாடல்களை தொடர்ந்து பல ஆண்டுகள் ஒலிபரப்பிவந்தது வந்தது. இவருக்கு Rhode island -இல் உள்ள ஒரு சர்வதேச பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இவர் கடந்த 50 ஆண்டுகளில் 365 பாடல்களை எழுதி, இராகம் அமைத்து,பாடி வெளியிட்டிருக்கிறார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவரது வாழ்க்கை,மற்றும் பாடல்களை குறித்த ஒரு புத்தகம் “முட்களுக்குள் லீலி புஷ்பம்”(Lilly among the Thtons)என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

கொஞ்ச காலம் இயேசுவுக்காக,

என்னை மறவா இயேசு நாதா,

திருப்பாதம் நம்பி வந்தேன்,

போன்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ்த்திருச்சபைக்கு வழங்கிய உத்தம ஊழியர் சாராள் நவரோஜி அம்மா தனது மண்ணுலக ஓட்டத்தை நிறைவு செய்து, நித்திய வீட்டுக்கு சென்று விட்டார்.

புகழ்மிக்க பல மேடைகளை தவிர்த்தார், தனது புகை படங்களை எங்கேயும் பிரசுரிக்க அனுமதித்ததேயில்லை. ஜெபத்திலேயே தனது வாழ்க்கையை செலவிட்டவர், தனது பாடல்கள் முழுவதும் ஜெபநேரத்திலேயே எழுதியிருக்கிறார். கனல் சிந்தும் பாடல் வரிகளை எழுதி பட்டித்தொட்டியெல்லாம் பாடினவர், கிராம ஊழியங்களை இழிவாக கருதுபவர்கள் நடுவில் கிராம மக்களை உண்மையாய் நேசித்து ஊழியம் புரிந்தவர்,

சென்னையில் ஊழியம் என்றாலே பந்தா, படோடாபம்,விளம்பரம், சொகுசு பங்களா, ஆடம்பர வாழ்க்கை, விலையுயர்ந்த கார் என்பவர்கள் நடுவில், எளிய வாழ்க்கையுடன், கிறித்துவை மையப்படுத்தி இறுதி வரை வாழ்ந்தவர்,

வருங்கால ஊழியராக வருவோர் இவரது வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மாசில்லாத சுத்தமான பக்தி கொண்டவர்.

அறிவர் எமில் ஜெபசிங் வரிசையில் பாடல் என்றாலே அன்றும் இன்றும் என்றும் அறிவர். சாராள் நவரோஜி என்று வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்து விட்டார்..

Suresh, Bible Missionary
Bible Society of India,TN.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE