நீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க! (அறிவியல் பூர்வமானது)

நம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் வருத்தப்படுபவர்கள் உண்டு. கருப்பாய் இருப்பதனால் சிறுவயதிலிருந்தே மற்றவர்களால் கிண்டல் செய்யப்பட்டு ஒரு தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள். இதை வாசிக்கிற நீங்கள் ஒருவேளை கருப்பாக பிறந்துவிட்டேனே என்று யோசிப்பீர்களாகில், உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். மற்ற எல்லா நிறத்திற்கும் தலைவர் அதாவது ராணி கருப்பு நிறம் தான் என்பது உண்மை. சிலர் தாய் தகப்பன் மூலம் கருப்பாய் பிறக்கின்றார்கள் என்பது பாதி சதவிகிதமே உண்மை. கருப்பாய் பிறப்பதன் காரணம் என்னவெனில்,

பொருள்களுக்கு நிறமூட்டும் ஒரு சாயப்பொருள் “மெலனின்” என்ற நிறமி நம் அனைவர் உடம்பிலும் காணப்படும். இந்த மெலனின்-னின் முக்கியமான நோக்கம் நம் தோல் பகுதியை பாதுகாப்பதற்காக ஆண்டவர் படைத்த ஒன்று நம் சரீரத்தில். மெலனின்-னில் முக்கியமாக இரண்டு வகை உள்ளது பிரவுன் மெலனின் மற்றும் கருப்பு மெலனின். இந்த மெலனின் என்ற நிறமி, குறைவாய் இருப்பவர்களுக்கு தோல் சிகப்பாக இருக்கின்றது. ஆனால் சிலருக்கு இன்னும் சற்று அதிகமாய் மெலனின் அவர்கள் தோலில் இருக்கும் போது பிரவுன் நிறத்தில் இருக்கின்றார்கள். இன்னும் பலருக்கு அதிகமான மெலனின் அவர்கள் தோலில் சுரக்கும்பொழுது அவர்கள் கருப்பு நிறத்தில் இருக்கின்றார்கள். இன்னும் அதிகதிகமாக மெலனின் சுரக்கும்போது இன்னும் அதிக கருப்பாக ஆகிவிடுகிறார்கள். இன்னும் ஒரு சுவாரசியமான ஒன்று சொல்லுகிறேன்.,

நாம் வெயிலில் வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்தால் கருத்துவிடுகின்றோம் என்று அனைவருக்கும் ஒரு எண்ணம் உண்டு. ஆனால் உண்மையில் அது நம்மை பாதுகாப்பதற்காக என்று யோசித்தால் நம்பமுடியவில்லை தானே! ஆம் நாம் எந்த நிறத்தில் இருந்தாலும், வெயிலில் செல்லும்போது இந்த மெலனின் நம் தோலில் தன்னிச்சையாகவே சுரக்க ஆரம்பிக்கின்றது. காரணம், நம் தோல்-யை சூரியனின் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதற்காகத்தான். அதனால் தான் நாம் வெயிலில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்பொழுது அதிக மெலனின் சுரந்ததால் அதிக கருப்பாக காணப்படுகின்றோம்.

கருப்பு என்பது ஒரு அழகான நிறம் தான். நம் தோல் பகுதியை பாதுகாக்க ஆண்டவர் கொடுத்த இந்த மெலனின் அளவை பொறுத்து நம் நிறம் வெளிப்படுகின்றது. வேதத்தில் உன்னதப்பாட்டு புஸ்தகத்தில் படிக்கின்றோம், “நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கின்றேன்” என்று. ஒருவேளை ஆணடவர் நம் வெளித்தோற்றத்தில் நிறத்தை முக்கியமானதாக பார்ப்பதாகயிருந்தால், அவர் எல்லோரையும் ஒரே நிறத்தில் படைத்திருப்பார். ஆனால், ஆண்டவரின் பார்வைக்கு நம் நிறம் முக்கியம் அல்ல, அதைவிட நம் இதயத்திற்குள் உள்ள பரிசுத்தத்தின் அழகே அவர் சமூகத்தில் முக்கியமாக பார்க்கப்படும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE