டாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி

நான் இந்தியாவின் சென்னையில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் மட்டும் நான்கு வேலைக்காரர்கள் இருந்தனர். எனது தந்தை ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பொறியியலாளர். எனக்காக 25 மாப்பிள்ளைகள் பெண் கேட்டு வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் வேண்டாம் என்று சொன்னேன், பின்னர் நான் 26 வது நபருக்கு ஆம் என்று சொன்னேன். அவரது பெயர் ஆர்.ஏ.சி பால் மற்றும் அவர் ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் மிஷனரி. நாங்கள் 1972 இல் திருமணம் செய்து கொண்டோம்”.
“நான் ஒரு மருத்துவராக இருந்தேன், வெப்பமண்டல வியாதிகளுக்கான மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றேன், எனவே நேராக, நாங்கள் மருத்துவ மற்றும் நற்செய்தி வேலைகளைச் செய்வதற்காக மல்கங்கிரி [இந்தியா] காட்டுக்குச் சென்றோம். இது எங்கள் வீட்டிலிருந்து ஜீப்பில் 27 மணிநேரம் தொலைவில் இருந்தது. ஓடும் நீரோ மின்சாரமோ இல்லை. மூன்று நாட்களுக்கு ஒருமுறை நான் மாட்டுச் சாணம் கொண்டு தரையை மொழுக வேண்டியிருந்தது. முதலில் நான் அழுதேன். பின்னர் கடவுள் என்னிடம் பேசினார். இயேசு மாட்டுச் சாணத்தின் நடுவே ஒரு மாட்டுக் கொட்டகையில் தானே பிறந்தார். நான் அழுவதை நிறுத்தினேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாங்கள் மலையேறி வெவ்வேறு கிராமங்களுக்குள்ளாகச் சென்று கொண்டிருந்தோம், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தோம், எங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டோம். அப்பகுதியில் வேறு மருத்துவர்கள் யாரும் இல்லை, எனவே நோயாளிகள் அதிகாலை 4.30 மணி முதல் வரிசையில் நிற்பார்கள்.
“கடினமாக இருந்தபோதும் நான் அதை நேசித்தேன். கடினமான விஷயம் என்னவென்றால், முதல் 15 ஆண்டுகளில், போண்டோ பழங்குடி மக்களிடமிருந்து யாரும் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. அவர்கள் இயேசுவில் ஆர்வம் காட்டினர், ஆனால் அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. பதினைந்து ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் , நாங்கள் எத்தனை கிராமங்களைப் பார்வையிட்டோம், எத்தனை பேருடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டோம், எத்தனை பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தோம் என்று பதில் எழுதவேண்டிய படிவங்களை எங்கள் இந்திய மிஷன் சொசைட்டிக்கு நாங்கள் நிரப்ப வேண்டியிருந்தது. பதினைந்து ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும், கடைசிக் கேள்விக்கு நாங்கள் பதில் எழுத முடியவில்லை.
“பின்னர் 1986 ஆம் ஆண்டில், பால் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை, நாங்கள் தென்இந்தியாவில் மருத்துவமனைக்குச் சென்றோம். பவுலுக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது … அதற்கு நடுவே அவர் இறந்தார். நான் திகைத்துப் போனேன். நான் மிகவும் அழுதேன், எனக்கு வயது 42 மற்றும் எங்களுக்கு நான்கு சிறிய குழந்தைகள் இருந்தார்கள். எல்லோரும் என்னிடம், ‘மல்கங்கிரிக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம். சென்னையில் தங்கியிருங்கள். இங்கேயே மருத்துவ சேவை செய்யுங்கள் என்றார்கள்.’
“ஆனால் ஒன்பது நாட்களுக்குப் பிறகு, நாங்கள் ஒரு ஜீப்பில் ஏறி, அதே கிராமத்துக்கும் மல்கன்கிரி மக்களுக்கும் திரும்பினோம். சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை நோயாளிகளைப் பார்க்க நான் திரும்பிச் சென்றேன். மக்கள் கவனித்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள், ‘நாம் பார்க்கிறோம், இந்த மருத்துவர் திரும்பி வந்துவிட்டார்கள், இவர்கள் நம்மை நேசிக்கிறார்கள். இவர்கள் நேசிக்கும் கடவுள் உண்மையானவராகத்தான் இருக்க வேண்டும்.’ அதன் விளைவு, ஆறு மாதங்களுக்குள், 36 பேர் ஞானஸ்நானம் எடுக்க ஒப்புக்கொடுத்தார்கள்! அதைத் தொடர்ந்து இப்போது மல்கங்கிரியில் 5,000 விசுவாசிகள் உள்ளனர்.
“நாம் எதிர்பார்க்காத வழிகளில் கர்த்தர் செயல்படுகிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். சில நேரங்களில், கர்த்தர் உங்களை மிகவும் கடினமான விஷயங்களுக்கு அழைத்துச் செல்கிறார், சிறந்த விஷயங்களுக்காக உங்களைப் பயிற்றுவிப்பார். இப்போது, நான் கோவிட் காரணமாக தனிமையில் மல்கங்கிரி மாவட்டத்தில் இருக்கிறேன், இப்போது இது கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு சிவப்பு மண்டலம். இங்கு 49 ஆண்டுகளை முடிக்க இயேசு எனக்கு உதவியுள்ளார்!
“இது கடினம், ஆனால் கர்த்தர் இன்னும் எனக்கு கற்பிக்கிறார். கடினமாக இருக்கும் போதெல்லாம், கர்த்தர் என்னிடம், “நான் உனக்காகத்தான் ஆணிகளைத் தாங்கினேன்” என்று கூறியுள்ளார்.
“எனக்கு மிகவும் பிடித்த வசனங்களில் ஒன்று சங்கீதம் 46 ல் உள்ளது. ‘நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறியுங்கள்’ (வசனம் 10). நான் கவலைப்படுகிற ஒவ்வொரு முறையும் இதுதான் என் சிந்தையில் மேலெழுகிறது. இப்போது, இன்று, நான் அமைதியாக இருக்க வேண்டும், அவர் கர்த்தர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்”.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
#என்_குறிப்பு: என்ன ஒரு அருமையான சாட்சி…!! Dr.Iris Paul இப்போதும் உற்சாகமாக ஊழியம் செய்து வருகிறார்கள். சமூக ஊடகமான முகநூலிலும் அவர்களைச் சந்திக்கலாம்.
வாட்சப்பில் சகோ. Babu John அவர்கள் அனுப்பிய சாட்சி!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE