கொரோனா தேவன் அனுப்பியதா? பிசாசு அனுப்பியதா?…பதில் இதோ

இந்த கேள்விக்கு என்னிடத்தில் பதில் இல்லை, என்னிடத்தில் மட்டுமல்ல யாரிடத்திலும் இதற்கு பதில் இருக்க வாய்ப்பில்லை உதாரணத்திற்கு இயேசு இப்போது வருவார் அப்போது வருவார் என்று பல வாக்குவாதங்கள் நம்மிடையே இருந்தாலும் அவர் வருவார் என்ற உறுதியான வாக்குத்தத்தம் மட்டுமே நம்மிடம் உண்டு அதுபோல தான் இந்த கொரோனாவை தேவன் தான் அனுப்பினாரா என்று எனக்கு தெரியாது ஆனாலும் ஒன்று உறுதியாக தெரியும் அவர் அனுமதிக்காமல் இந்த உலகில் ஒரு அனுவும் அசையாது எனவே பிசாசே அனுப்பியிருந்தாலும் கூட தேவனுடைய அனுமதியில்லாமல் நிச்சயம் இவ்வளவு பெரிய வாதை நம் பூமியின் மேல் வர முடியாது ஆகவே அழிவு நேரிடப் போகிறது என்று தெரிந்தும் தேவன் அமைதியாய் இருக்கிறார் என்றால் நிச்சயம் தேவனின் அமைதிக்கும் ஒரு காரணம் உண்டு எனவே யாரால் வந்தது என்ற வாக்குவாதங்களை நிறுத்திவிட்டு எதனால் வந்தது என்பதை அறிந்து செயல்பட வேண்டிய நேரமிது…

நம் தேவன் இரக்கமுள்ளவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, எங்கள் தேசத்தின் மீது மனமிறங்கும் என்று அழுது கண்ணீர் வடிக்கும் நம்மைவிடவும் அவர் இந்த தேசத்தின் மீது அதிக கரிசனையுள்ளவர்.

வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத நினிவே ஜனங்களுக்காக மனமிறங்கிய தேவன் அவர் ஆனால் அதே தேவன் தான் மனிதர்கள் எப்போதெல்லாம் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு விரோதமாக வாதைகளை
அனுப்பியிருக்கிறார். தேவனுடைய திட்டத்திற்கு விரோதமாக பார்வோன் ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளை அடைய நினைத்த போது தேவன் பார்வோனின் வீட்டார் மேல் வாதையை அனுப்பினார், தன் சொந்த ஜனங்களே தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக முறுமுறுத்த போது தேவன் அவர்கள் மீது கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பியிருக்கிறார், அதுமட்டுமல்ல தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக சவுல் ராஜா செயல்பட்ட போது தேவனே அவன் மீது பொல்லாத ஆவியை வரவிட்டார் என்பதும் வேதத்தில் உண்டு,

ஒருவேளை அது பழைய உடன்படிக்கையின் நாட்கள் ஆனால் இப்போது நாங்கள் புதிய உடன்படிக்கையின் கீழ் இருக்கிறோம் இங்கே தேவன் மனதுருக்கம் உள்ளவராயிருக்கிறார், மன்னிக்கிறவராயிருக்கிறார் என்று வாதாடினாலும் அதே கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையின் கீழ் இருந்த அனனியாவும் சப்பீராளும் தேவனுக்கு முன்பாக பொய் சொன்ன போது தேவனால் தண்டிக்கப்பட்டார்கள் என்பது புதிய ஏற்பாட்டிலும் உண்டு எனவே பழைய உடன்படிக்கை என்றாலும் புதிய உடன்படிக்கை என்றாலும் தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கிறார் என்பதே உண்மை!!!

இன்றைக்கும் தேவனுக்கு விரோதமான அருவருப்பான பாவங்கள் அதிக அளவில் தேசங்களில் பெருகியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது அப்படியிருக்கும் போது இன்னும் தேவனை தீங்குச் செய்யாதவராக மட்டுமே காண்பிப்பதில் தவறு ஏதும் இல்லை ஆனால் அது நம்முடைய லாபத்திற்காகவா?? அல்லது பரலோகத்தின் லாபத்திற்காகவா??
இதற்கு முன் சுதந்திரமாக சுவிசேஷங்களை அறிவித்த இதே தமிழ் நாட்டில் இப்போது கர்த்தருடைய பிள்ளைகள் விரட்டியடிக்கப் படுகிறார்களே அதுவும் பெண்கள் என்றுக் கூட பாராமல் அவமானப்படுத்தப் படுகிறார்களே ஆனால் நாம் பிரச்சினையில்லாத ஓரே இடத்தில் ஊழியம் செய்வதால் தேவன் தீங்கே செய்யாதவர் என்று வாதாடுவதில் தவறு ஏதுமில்லை ஆனால் அது நம் சுயநலத்திற்காகவா?? அல்லது சுவிசேஷத்திற்காகவா??
தேவனுக்கு விரோதமாக எழும்பின ஜனங்கள் மீண்டும் தேவனிடம் திரும்பின போது தேவன் ஜனங்களை அழிவிலிருந்து விடுவித்து மறுவாழ்வு கொடுத்திருப்பதையும் வேதத்தில் காணலாம் எனவே தேசம் தேவனுக்கு நேராக திரும்புவதே இதற்கு தீர்வு அதுவே தேவனின் எதிர்பார்ப்பு!!!

பழைய உடன்படிக்கையோ புதிய உடன்படிக்கையோ… நியாயப்பிரமானமோ கிருபையோ…ஏன் நாங்கள் தான் சீயோனுக்கே சொந்தக்காரர்கள் என்று சொன்னாலும் கூட இன்று பாரபட்சமே இல்லாமல் சபைகளின் கதவுகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது தேவனுடைய சபைகளும் கூட தேவனுக்கு விரோதமான பெருமைகளையும், துனிகரமான பாவங்களையும், நிர்விசாரங்களையும் சுத்தம் செய்து தாழ்மையுள்ள இருதயத்தோடு தேவனுக்கு நேராக திரும்ப வேண்டும் என்பதே தேவனின் எதிர்பார்ப்பு அப்படித் திரும்பினால், நேற்று சபைகள் திறந்திருந்தப் போது கூட ஏற்படாத எழுப்புதல் இன்று சபைகள் அடைக்கப்பட்டிருக்கும் காலங்களில் ஏற்படும்!!!

இனி காலம் செல்லாது…
இதுவே கடைசிக் காலம்…
இதுவரை நாம் அறிவித்தது இந்த உலகத்திற்கு வந்துப் போன கிறிஸ்துவை ஆனால் இனி நாம் அறிவிக்க வேண்டியது
வரப்போகும் கிறிஸ்துவை, அவர் அடிக்கப்படும் ஆட்டுக் குட்டியாய் அல்ல நிதியுள்ள நியாயாதிபதியாய் வரப்போகிறார் எனவே கண்ணீல் பட்ட வாக்குதத்தங்களையும், காதில் கேட்ட தீர்க்கதரிசனங்களையும் மூட்டைகட்டிவிட்டு இதோ இயேசு சீக்கிரம் வரப்போகிறார் என்ற வாக்குதத்தத்தையும் தீர்க்கதரிசனத்தையும் தைரியமாய் அறிவிப்போம், சபைகள் தேவனுக்கு நேராக திரும்பும் போது தேசங்களும் ராஜியங்களும் தேவனுக்கு நேராக திரும்பும்!!!
-Pastor. Ebenezer
Ebenezer Newlife

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE