Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் தாவரம் ” சவப் பூ ” – Corpse Flower ஆகும். இது ஓர் வியத்தகு செடி. ஒரு தொட்டியில் வளர்க்க கூடியசெடிதான். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூ பூக்கும். ஆனால் இது பூக்கும்போது சுற்று வட்டாரம் முழுவதும் அழுகிய உடல்போன்று கெட்ட நாற்றம் வீசும். – Once open, the huge spiky, beautiful, red bloom smells like rotten meat.
அழகான அந்தச் சிவப்பு, மிகப் பெரிய பூ மலர்ந்தவுடன் கெட்டுப்போன , அழுகிய உடல் போன்று நாற்றத்தினால் கவரப்பட்ட, அழுகிய உடல்களைத் தேடி அலையும் ஈக்களையும் வண்டுகளையும் அந்தப் பூ தன்பால் ஈர்த்து, மகரந்த சேர்க்கை நிகழும்.
ஆனால் அந்தப் பூவில் தேனோ, மகரந்தமோ இல்லாத்தினால் ஈக்களும் வண்டுகளும் ஏமாற்றமடையகின்றன.
அந்தப் பூவைப் போன்றே பாவச் செயல்களும் நம்மை ஈர்த்து இழுக்கிறது. பாவம் எவ்வாறு உலகில் உறுவாகியது என்பதை விளக்குகிற தொடக்க நூல் ஆசிரியர்கள், ஏதேனில் இருந்த அந்த தோட்டத்தின் மையத்திலிருந்த மரத்தின் கனி பார்ப்பதற்கு அழகும் இனிமையுமாக இருந்தது என்று எழுதுகிறார்கள். அதன் அழகில், வண்ணத்தில் ஈர்க்கப்பட்ட ஆதாமும் ஏவாழும் அதை உண்டு,நிலையான மரணத்தை ஏற்றனர் என்று எழுதுகிறார்கள். அது ஒரு” சவக் கனிதான் – Corpse Fruit “.
உண்மைதான். இவ்வுலகில் பாவச் செயல்கள் நம்மைக் கவர்ந்து ஈர்க்கும் வண்ணம் பகட்டாகவே உள்ளன. ஆனால் நாம் அப்பாவச் செயல்களைச் செய்வதன் மூலம் நிலையான மரணத்தை ஏற்கிறோம். இதைவிடுத்து நற்செயல்களைச் செய்து நிலைவாழ்வை ஏற்கனவே ஆண்டவர் நம்மை அழைக்கிறார். ஆண்டவருடன் இணைந்தே வாழ்வோம்.

-Bro.Augustine Jeevakani

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE