கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் வேதாகமத்தின் தேவை அதிகரித்திருக்கிறது.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் பரவி வரும் நிலையில், மக்கள் தேவனின் உதவியைத் தேடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக வேதாகமத்தின் நகல்கள் அதிகமாக விற்பனை ஆகின்றன என்று அமெரிக்க வெளியீட்டாளர்கள் கூறுகின்றனர்.

சர்வ தேசமெங்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் நம்பிக்கையையும் மீட்டெடுப்பையும் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலைகள் மற்றும் நிதி சிக்கல்களுக்கு மத்தியிலும் கூட, மக்கள் தங்கள் அன்புகுரியவர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்காக வேதாகமத்தை வாங்கி வருகின்றனர்.

தேவனுடைய பிரசன்னத்தில் இணைவதற்கும், அவருடைய வார்த்தையை தியானிப்பதற்கும், அமைதியை அனுபவிப்பதற்கும் மக்கள் ஆர்வமாய் உள்ளதல் வேதாகமத்தை வாங்குகிறார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும், வேதாகமத்தை அச்சிடும் நிறுவனம் தனது புத்தகங்களில் ஒன்றிலிருந்து 100% வருவாயை கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மருத்துவ தேவைக்கு நன்கொடையாக அளிக்கிறது.

இந்நாட்களிலே வேத தியானம் மற்றும் கிறிஸ்தவ செய்திகளைக் கொண்ட இணையத்தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 62% உயர்ந்துள்ளது.

இதன் மூலம் ,இந்த நெருக்கடி நேரத்திலும் தேவனுடைய வார்த்தை அவருடைய ஜனங்களை தேற்றுகிறது மற்றும் நம்பிக்கை அளிக்கிறது என்பதை காணலாம்.

தேவனிடத்தில் சேருங்கள் அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். யாக்கோபு 4:8

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE