முதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு!

தரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான கனம் சுவாட்ஸ் ஐயர் காலத்தில் ( 1750 – 1798 ) மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் வரையிலும் இயேசு நாதரின் நற்செய்தி பரவியது. சுவாட்ஸ் ஐயர் திருச்சியில் ஊழியம் செய்துவந்த நாட்களில் அவரின் பிரசங்கத்தைக் கேட்டுத் தம் மதத்தைத் துறந்து சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர் பாளையங்கோட்டையிலிருந்து தம் சொந்த அலுவலாய் திருச்சிக்குச் வந்திருந்த ரோமன் கத்தோலிக்கரான சவரிமுத்து என்பார் .

இவர் சுவாட்ஸ் ஐயர் இடத்திலிருந்து பெற்ற சுவிசேஷப் பிரதியுடன் நெல்லைக்குத் திரும்பித் தன் உறவினரான தேவசகாயம் பிள்ளைக்கு அதை வாசித்துக் காட்டி, அவர் தன் குடும்பத்துடன் இயேசுவின் பிள்ளைகளாக மாறினார். தேவசகாயம் பிள்ளையின் குடும்பமே நெல்லையில் முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவக் குடும்பமாகும். தஞ்சை அரசனின் அரண்மனைப் புரோகிதரின் சிறிய மகள் லட்சுமியைப் பாம்பு கடித்ததால், மயக்கமடைந்த நிலையில் கிடந்த அவளது காயத்தில் பேனாக் கத்தியால் கிழித்து ரத்தம் விஷத்துடன் வடியச் செய்து உயிர் காத்தவர் தஞ்சை பிரிட்டிஷ் காவற்படைவீரன் ஜான் லிட்டில்டன் என்பவர். இறந்துப்போன லட்சுமியின் கணவர் உடலுடன் உடன்கட்டையேற அவளின் சொந்தபந்தங்கள் பலவந்தப்படுத்த, அநேரமும் எதிர்பாராவிதமாக முதல்முறை அவள் உயிரைக்காத்த அந்த வீரன் ஜான் மறுபடியும் அங்கேவர, மறுபடியும் லட்சுமியின் உயிர் காப்பாற்றப்பட்டது. உயிர்க்காப்பாற்றப்பட்டதை விரும்பாத அவள் தகப்பன், கடைசியில் வேறுவழியில்லாமல் அவளை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது.

அதன்பின் கிறிஸ்தவனான அந்த காவற்படைவீரன் லட்சுமிக்கு இயேசுவின் அன்பைப் போதித்து இயேசுவை விசுவாசிக்கும் ஒரு விசுவாசியாக மாறச்செய்தான். அவருடைய மனைவி இங்கிலாந்திலிருந்தபடியால், லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள இயலாதிருந்தாலும், தன் சம்பளத்தையெல்லாம் அவளுக்கே கொடுத்தான். தஞ்சையிலிருந்து பாளையங்கோட்டைக்கு வேலை மாற்றப்பட்ட சில காலத்திற்குள் ஜான் மரணமடைந்தார். அதன்பின் லட்சுமி, குளோரிந்தா என்ற பெயருடன் 1778ல் ஞானஸ்நானம் பெற்று, திருநெல்வேலியில் இந்து மதத்திலிருந்து வந்த முதல் கிறிஸ்தவளானாள் .

ஈராண்டுகளுக்குள் அவர்களது நற்செய்தி முயற்சியின் பலனாகச் சுமார் நாற்பது ஆத்துமாக்களைக் கொண்ட முதல் சபை பாளையங்கோட்டையில் தோன்றிற்று . மேலும், அவர்களது முயற்சியினாலேயே திருநெல்வேலியின் முதல் சபைப்போதகராக தஞ்சை சத்தியநாதன் ஐயர் பாளையங்கோட்டைக்கு வந்து 1786 – 1805 வரை சுமார் 20 ஆண்டுகள் ஊழியம்செய்தார். பாளையங்கோட்டையில் முதல் ஆலயத்தை குளோரிந்தா அவர்கள் கட்டினார். அது முதல் திருச்சபையாக அங்கே வேரூன்றிற்று .

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE