இப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா? மாமல்லபுரத்தை கலக்கும் வள்ளியம்மாள்

சுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலுமிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிவது வழக்கம். குறிப்பாக இங்கு நரிக்குறவர்கள் பலர் சாலையில் விதவிதமான வண்ணங்களில் பாசிகள், பவளமணி என அணைத்தும் தாங்களே தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கே சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சுற்றுலா அமைப்பின் சார்பாக மொழிப்பயிற்சி அளிக்கப்படும். ஆனால் எந்த பயிற்சியும் எடுக்காமலே பல மொழிகளில் சரளமாக பேசி வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்த நரிக்குறவர்கள்.

அவர்களில் ஒருவர் தான் மாமல்லபுரம் பூஞ்சேரி யை சேர்ந்த நரிக்குறவ பெண் வள்ளியம்மாள். தினமும் தனது மூன்று வயது குழந்தையுடன் வியாபாரத்திற்கு வரும் இவர், ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர். புராதன சின்னங்களை காணச் செல்லும் சுற்றுலா பயணிகளை ஆங்கிலம், பிரெஞ்சு, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி,பெங்காலி என பல மொழிகளை தனது நுனி நாக்கில் பேசி, தான் தயாரித்த பவளமணி பாசிமணி விற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார் வள்ளியம்மாள்.

இவரது திறனைக் கண்டு வியக்கும் சுற்றுலா பயணிகள் இவரது பன்மொழி பேசும் திறனை பாராட்டிவருகிறார்கள். நரிக்குறவர்களில் பலர் தற்போது நாகரீக வாழ்க்கைக்கு திரும்பி வரும் சூழ்நிலையில் அதே சமூகத்தை சேர்ந்த வள்ளியம்மாளும் தானும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் யாருடைய உதவியும் எவ்வித பயிற்சியும் இல்லாமல் சரளமாக பழமொழி பேசி அசத்தி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இப்போதும் கூட பலர் தங்கள் குடும்பத்தின் பிண்னியங்களைப் பார்த்து தங்கள் லட்சியங்களை விட்டு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்கின்றனர். அவர்களுக்கு இந்த வள்ளியம்மாள் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பது போல, வேதத்தில் நாம் பார்க்கும் ரூத் ஒரு மோவாபிய தேசத்தாள். தன் கணவனை இழந்தும், தன் பெற்றோர் வீட்டிற்கு திரும்பி செல்லாமல், தன் தேசத்தை விட்டு மாமியாரோடே யூதா தேசத்திற்கு வந்தாள். அவள், தான் ஒரு மோவாபிய ஸ்திரீயாக இருந்து எதிர்காலங்களை உருவாக்கிட இயலாது என்று அறிந்தும், தன் குடும்பத்திற்கு உண்மையாய் இருந்து தன்னால் இயன்றவற்றை அந்த யூதா தேசத்திலே செய்து வந்தாள். அதன்நிமித்தமாய் அவள் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டு, இந்த உலகத்தை மீட்க வந்த ரட்சகராகிய இயேசு கிறிஸ்து அவளது வம்சாவளியில் வெளிப்பட்டார். எவ்வளவு பெரிய ஆசிர்வாதம் இது? இன்றைக்கும் கூட நீங்கள் உங்கள் குடும்ப பின்ணியங்களை பார்த்து சோர்ந்து போய் என்னால் முன்னுக்கு வரமுடியாது என்று எண்ணுகிறீர்களா? அந்த வள்ளியம்மாள் மற்றும் வேதத்தில் ரூத் சொல்லி கொடுக்கும் அந்த அழகான வாழ்க்கையை முன்னோக்கி செல்வோம் ஆண்டவரின் உதவியோடு.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE