இயேசு கிறிஸ்துவின் ஒவியத்தை வரைந்தவர் யார் என்று தெரியுமா? வியப்பில் ஆழ்த்திய சாட்சி

கியேன் கிராமரிக் (Akiane Kramarik) ஒரு கடவுள் நம்பிக்கையற்ற குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது நான்காம் வயதில் பரலோகத்தை குறித்த தரிசனங்களையும், சொப்பனங்களையும் பெற்றிருந்தார். பின்பு அவர், தன் தரிசனத்தில் காண்பதை தானாக, பிறர் உதவி இல்லாமல் ஓவியமாக வரைய ஆரம்பித்தார். அவர் அதற்கு முன்பு எந்தவித ஓவிய பயிற்சியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேவன் அவருக்கு கற்று கொடுத்தார். அவரது கலையைக் கண்டு தானே வியப்படைந்தார். இப்படிபட்ட ஆதாரங்களைப் பார்த்த அவரது குடும்பமும் நாளைடைவில் இயேசு கிறிஸ்துவையும், பரலோகம் பற்றிய உண்மைகளையும் விசுவாசிக்க ஆரம்பித்தனர்.

அவரது குறிப்பிடத்தக்க முக்கியமான கலைப்படைப்புகளில் ஒன்று “பிரின்ஸ் ஆஃப் பீஸ்” ,அவர் தனது 8 வயதில் உருவாக்கிய ஒரு நேர்த்தியான ஓவியம். இந்த தலைசிறந்த படைப்பு ‘கால்டன் பர்போ(Heaven is for Real)’ என்னும் நிறுவனத்தால் இயேசு கிறிஸ்துவின் தத்ரூபமான ஓவியம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனது அனுபவங்களை அன்புடனும், பணிவுடனும் பகிர்ந்து கொண்ட்தால்தான் தேவன் அவரை தெரிந்தெடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

‘இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்’ என்ற வசனத்தின்படி தேவன் நம் ஒவ்வொருவரையும் அவர் நாமத்தை மகிமை படுத்தும்படியாக தெரிந்தெடுத்துள்ளார். எனவே, நம் வாழ்நாளில் தேவனை மகிமை படுத்தும் வண்ணமாக அவருக்கு பிரியமானதை செய்வோம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE