Lottie Moon(1840-1912) சீன தேசம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஒரு கம்யூனிச நாடு. பொதுவுடமைக் கொள்கை பரவியிருந்தது. கடவுள் பக்தியற்ற அரசாங்கம் மக்களை ஆட்சி செய்து கொண்டிருந்தது. எனவே நீதியும், நேர்மையும் பெயரளவிலே காணப்பட்டது. இயேசு இல்லாத நாடு எப்படியிருக்கும்? இருளில் அல்லவா மூழ்கிக் கிடக்கும் ?
சீன தேசத்தை நோக்கிப் பல மிஷனெரிகள் பற்பல தரிசனங்களுடன் கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கக் கடந்து சென்று கொண்டிருந்தனர். சிலர் பாதியிலேயே திரும்பிவிட்டனர். ஏனெனில் உபத்திரவங்களும், போராட்டங்களும் அங்கு மலிந்து கிடந்தன.
லோத்தி மூன் தன்னந்தனியான பெண்ணாக சீன தேசத்தை நோக்கிப் புறப்பட்டாள். உள்ளத்தில் இயேசு இருந்ததால் அவள் வேறெதற்கும் பயப்படவில்லை. சீனர்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் கிறிஸ்துவே வீற்றிருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளே அவர் சிந்தையில் நிறைந்திருந்தது. 1885ல் ஆரம்பிக்கப்பட்ட அப்பயணம் மிகவும் சுறுசுறுப்படைந்து பற்பல மக்களை சந்திக்கச் செய்தது.
பிங்குடு என்னும் இடத்தில் பணி செய்ய இடம் பெயர்ந்தபோது அவர்களுக்கு 44 வயதாகியிருந்தது. அங்குள்ள மக்கள் அம்மையாரைப் பார்த்துப் பேய் பிடித்த கிழவி என்று தூற்றினர். ஆயினும் அஞ்சா நெஞ்சத்துடன் பணியைத் தொடர்ந்தார் லோத்தி.
விடுப்பு எடுக்கவேண்டிய காலத்தில் கூட விடுமுறை எடுக்காமல் மும்முரமாகச் சுவிசேஷப் பணியில் ஈடுபடலானார். இதினிமித்தம் திருச்சபை ஒன்றை ஆரம்பித்தார். 1889ம் ஆண்டில் ஞானஸ்நான ஆராதனையும் நடைபெற்றது. இருபது ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேலானோர் இயேசுகிறிஸ்துவைத் தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
#சீன மக்களுக்காகவே வாழ்ந்த இத்தாய் 1912ம் ஆண்டு இளைப்பாறுதலில் பிரவேசித்தார்.
அன்பரே! எதிர்ப்பு வரும் இடங்களிலும் உறுதியாக நின்று நற்செய்தியை அறிவிப்பதற்கு நீங்கள் ஆயத்தமா?
வாழ்விலிருந்து வாழ்வுக்கு: ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதைக் காட்டிலும் ஆழமான சந்தோஷம் வேறெதிலும் இல்லை – லோத் மூன்
ஆண்டவரே ஆத்துமாக்களை நானும் ஆதாயப்படுத்தி உமக்குள் களிகூர எனக்கு உதவி செய்யும்.
Source: Facebook