ஈரான் சிறையை கலக்கிய இரு பெண்கள்!

மரியம் ரோஸ்டம்பூர் (Maryam Rostampour) ஈரானில் பிறந்த இவர் அவர்கள் மதமுறைமையின்படி மிகவும் கண்டிப்பாக வளர்க்கப்பட்டார். அவருக்கு ஒருநாள் ஒரு புத்தகத்தை வாசிக்க நேரிட்டது. அது லூக்கா சுவிசேஷ புத்தகத்தை அடக்கியது. அதை வாசித்தபொழுது அவர் இயேசுவை தன் சொந்தரட்சகராக ஏற்றுக்கொண்டதை உணர்ந்த அவர், அந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தில் இப்படியாக எழுதினார்களாம், “என் இருதயத்தை உமக்காக தந்துவிட்டேன்” என்று. அதேபோல மார்சியே அமிரிசாதே (Marziyeh Amirizadeh) அவர்களும் ஈரானின் மதமுறைமையில் பிறந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர். துருக்கியில் எதேச்சையாக சந்தித்த இவர்கள் இருவரும் காலசூழ்நிலையின் மத்தியில் ஆண்டவரை தங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு மிகுந்த வைராக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர் பல எதிர்ப்புகளின் மத்தியிலும். இவர்கள் இருவரும் ஈரானுக்கு திரும்பி வரும்போது 20,000 பைபிள் கொண்டுவந்து விநியோகம் செய்தனர். அதன்மூலம் வீட்டு ஜெபங்கள் ஆரம்பித்தது. அது அரசாங்கத்திற்கு தெரியவர 2009 ஆம் ஆண்டில் இவர்கள் பெயர்கள் பல ஊடகங்களில் அதிகமாக வந்துகொண்டேயிருந்தது. இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களாக மாறியதற்காக ஈரான் அரசு இவர்களுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

அதற்காக சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் பல துன்புறுத்துதலுக்கு ஆளானார்கள். படுப்பதற்கு குளிர்ந்த தரையையும், சிறுநீர் கழித்த போர்வையையும் அவர்களுக்கு கொடுத்தார்கள். இப்படியிருக்க அடிக்கடி பெலவீனப்பட்டார்கள் ஆனால் இவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்க மருத்துவர்கள் இவர்களுக்கு மருத்துவம் செய்ய மறுத்தனர். சககைதிகள் இவர்களுடன் பழக, உதவிசெய்ய முன்வரவில்லை. அதற்குப்பதிலாக அவர்களை ஏளனம் செய்தனர், புறக்கணித்தனர், துன்புறுத்தினர். ஆனாலும் கிறிஸ்தவத்தில் இருந்த வைராக்கியம் அவர்களுக்குள் குறையவே இல்லை. மேலே அரசாங்கத்திடமிருந்து பல மிரட்டல்கள் வந்தன. இப்படி கிறிஸ்துவத்தை மறுதலியாமலிருந்தால் மின்சாரம் வைத்து துன்பப்படுத்துவோம் மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்துவோம் என்று. மேலும் அவர்கள் கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை கைவிட்டால் விடுவிக்கப்படுவீர்கள் என வாக்குறுதிகளும் கொடுத்தார்கள். ஆனால் அவர்களிடமோ எந்த மாற்றமும் இல்லை.

தொடர்ந்து துன்பங்களை சகித்து வந்த அவர்களுக்கு, காலங்கள் மாறினது. அவர்களிடம் எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று சிறையிலிருந்தவர்கள் வரிசையில் வந்து நின்றனர். அங்கே சிறைக்காப்பாளர்களாக இருந்த இரண்டு பெண்கள் பலவருடமாக குழந்தை இல்லாததினால் குழந்தை பாக்கியம் கிடைக்க ரகசியமாக ஜெபிக்க கேட்டுக்கொண்டார்கள். ஆண்டவர் ஜெபத்திற்கு பதில் தரவே அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது. மேலும் சிறை அதிகாரிகளும் மறைமுகமாக வந்து ஜெபிக்க ஆரம்பித்தனர். கைதிகளோ அவர்களிடம், அவர்களை துன்புறுத்தினத்திற்காக மன்னிப்பு கேட்டு, தாங்கள் வாழ்க்கையில் செய்த பாவங்களை அறிக்கைசெய்து ஆண்டவரிடம் மனம் திரும்பினார்கள். அந்த நாட்களிலே அவர்கள் ரட்சிப்பையும் மீட்பையும் பெற்றுக்கொண்டார்கள் என்பது வரலாறு. உலக நாடுகளின் சமூகங்கள் தலையிட்டதால் 259 நாட்கள் சிறைவாசத்தோடு விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் அந்த சிறை இன்னும் அவர்கள் பெயரை உச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சிறைச்சாலையை ஒரு தேவாலயமாக அவர்களால் மாற்ற முடிந்திருந்தால், நாமும் நாம் வசிக்கும் பகுதியை, நாம் வேலை பார்க்கும் ஸ்தலத்தை, நாம் குடியிருக்கும் குடும்பத்தை கண்டிப்பாக ஒரு தேவாலயமாக மாற்றலாம் என்பது மறுக்கமுடியாத நிச்சயம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE