உண்மை சம்பவம்! ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்!

நோரா வுட் (Norah Wood) என்ற 4 வயது சிறுமி எல்லாரையும் கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். அவளுடைய தாயார் தாரா (Tara) அவளை அன்பை பகிரக்கூடிய நல்லபழக்கவழக்கங்களில் வளர்த்து வந்தார். நோராவும் தயங்காது எல்லாரிடமும் தன் அன்பை பகிருவாள். ஒரு நாள் ஒரு மளிகை கடைக்கு சென்ற தாராவும் நோராவும் பொருள்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது, நோரா தற்செயலாக 84 வயதான மிஸ்டர் டான் பீட்டர்சன்-யை (Dan Peterson) சந்தித்தாள். டான்-யை பார்த்தவுடன் ஓடிப்போய் அவரை இறுகக்கட்டியணைத்து, இன்று எனக்கு பிறந்தநாள் என்று சொல்லி முத்தமிட்டாள். அந்த அன்பை ருசித்த மிஸ்டர் டான் அவர்கள், மிகவும் சந்தோஷத்தில் சமாதானத்தில் மிதந்தார். காரணம், இது தான்.

மிஸ்டர் டான் அவர்களுக்கு, மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும், 5 பேரன் பேத்திகளும், ஒரு கொள்ளு பேரனும் உண்டு. ஆனால் மனைவியை தவிர மற்ற எல்லாரும் வேறு நாட்டில் வசித்துவந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு (நோராவை சந்தித்த அந்த நாளில் இருந்து) தன் மனைவியை இழந்தார் மிஸ்டர் டான். அதனால் 6 மாதங்களாக மிகவும் மனஉளைச்சலில் காணப்பட்ட அவர், செய்வதறியாமல் திகைத்துப்போய், வாழ்க்கையை வெறுத்த நிலைமையில், வாழ்க்கையின் நோக்கத்தை இழந்தவராய் இருக்கும் போது தான், நோரா அவரிடம் ஓடிவந்து கட்டியணைத்து முத்தமிட்டாள். அந்த ஒரு முத்தம், அந்த அன்பின் பரிமாற்றம் அவர் வாழ்க்கைக்கு அந்த நிமிடமே ஒரு அர்த்தத்தத்தைத் தந்தது என்று சொல்லலாம். அந்த ஒரு முத்தத்தோடு அவர் மனதில் இருந்த கவலை, பாரம், மனஉளைச்சல்கள் எல்லாம் பறந்து ஓடின. அதன் பின் மிஸ்டர் டான் நோரா பாப்பாவை மிகவும் நேசித்தார். இருவரும் நண்பர்களாயினர். நோரா அவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை, மாறாக, அவரை நேசிக்க நான் இருக்கிறேன் என்று உணர்ந்தால் போதும் என்று டான் உடன் பழகினாள்.

மிஸ்டர் டான்-னுக்கோ ஆறு மாதங்கள் கழித்து ஒரு சந்தோசம் மனதினில் ஏற்பட்டது. அதிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை சென்று மிஸ்டர் டான்-யை சந்தித்துவிடுவாள் நோரா. ஒவ்வொருமுறையும் சந்திக்கும்பொழுது கட்டியண்ணைத்தும், முத்தங்களாலும் மிஸ்டர் டான்-யை நிறைத்துவிடுவாள். அப்படி ஒரு அன்பை மிஸ்டர் டான் எங்கேயும் பார்த்ததில்லை என்று சொல்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து வீட்டில் தோட்டங்களை உருவாக்கினர். வாரத்திற்கு ஒருமுறை வெளியே சென்று வந்தனர். கடைசியாக நோராவின் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழாவில் பங்குபெற்று அவளை முத்தமிட்டு வாழ்த்தினார் மிஸ்டர் டான். அதன்பின் அவர் மரித்துப்போனார் என்பது நோராவாலும், நம்மாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற ஒரு உண்மை. அவருடைய இறுதிச்சடங்கில் பங்குபெற்று கடைசிவரையில் தன்னுடைய அன்பை மிஸ்டர் டான்-ற்கு கொடுத்தாள் நோரா.

வாழ்க்கையின் நோக்கத்தை இழந்த ஒரு மனிதனுக்கு, ஒரு சிறுபெண் தன் அன்பினால் அவரை வாழவைத்திருப்பானால் ஆச்சர்யப்படவேண்டிய உண்மை. இன்றும் உலகத்தில் சமாதானமில்லாமல் சந்தோஷமில்லாமல் வேதனையோடும் கண்ணீரோடும் அங்கும் இங்கும் அலைகின்ற மக்கள் மத்தியில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம். எங்கோ எப்படியோ அலைந்துக்கொண்டிருந்த நமக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்திருக்கின்ற நிலையில், அதை நாமும் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம். ஆண்டவராகியஇயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் சகமனிதனாய் வாழ்ந்துக்கொண்டிருந்த நாட்களில் மனிதர்கள் எல்லாருக்கும் நன்மை செய்கிறவராய் சுற்றித்திருந்தார் என்று வேதத்தில் பார்க்கின்றோம். உங்களின் ஒரு குட்டி சிரிப்பு, ஒரு குட்டி ஊக்கப்படுத்துகிற வார்த்தை ஒருவருக்கு அவரின் வாழ்க்கையின் நோக்கத்தை அறியச்செய்யும். ஒரு சிறுபெண்ணால் அன்பை பகிரமுடியுமானால் நம்மளாலும் பகிரமுடியும் என்பது அதிக நிச்சயம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE