சர்ச்சுக்கு வரமுடியாத காரணத்தால் ஆன்லைன் ஞானஸ்நானம் கொடுக்கும் பாஸ்டர்.

தனிமைப்படுத்தல் காரணத்தால் ஒரு சில கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களுடைய படைப்பாற்றலை கூர்மைப்படுத்தியதாகத் தெரிகிறது, ஆன்லைன் ஆராதனை, ஆன்லைன் செய்தி, ஆன்லைன் காணிக்கை போன்ற காரியங்கள் சமுக வலைதளங்களில் பரவிகிடக்கும் இந்த சூழ் நிலையில், பிரைசில் நாட்டைச் சேர்ந்த போதகர் ஒருவர் ஆன்லைனில் ஞானஸ்நானம் கொடுத்துள்ளார்.

“ஒரு மேய்ப்பனாக, என் ஆடுகளின் வாழ்க்கையை நான் கவனித்துக்கொள்கிறேன்” என்று அந்த சபையின் தலைமை போதகர் பெட்ரியோ கூறுகிறார். சமூக தனிமைப்படுத்தலை மதித்து சபைக்கு யாரையும் அழைக்காமல் பாஸ்டர் பெட்ரியோவிடம் ஏற்கனவே 18 பேர் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர், நேற்று ஈஸ்டர் தினத்தன்று 12 விசுவாசிகளுக்கும் ஞானஸ்நானம் கொடுத்துள்ளார்.

ஞானஸ்நானம் பெற விரும்பும் நபர்கள் எங்களிடம் உள்ளனர். ஒரு சில விசுவாசிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதால் நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு என்று தெரியாத காரணத்தால் போதகர் இந்த முறையில் ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று தன்னை நியாயப்படுத்துகிறார்.

மேலும் இயேசு கூறினபடி, நாம் கற்பிக்க வேண்டும், ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும், சுவிசேஷம் செய்ய வேண்டும் என்ற மாபெரும் கட்டளையின்படி (GREAT COMMISSION) நாங்கள் இந்த சேவை செய்கிறோம் என்று பாஸ்டர் பெட்ரியோ கூறினார்.

மனந்திருந்தி ஞானஸ்நானம் எடுக்கும் காலத்தை அந்த சபை மக்கள் தவற விட்டதின் விளைவு. நாம் சிந்திப்போம் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்வோம், தவறினால் பின்பு பரலோக இராஜ்ஜியம் அரிதாகி விடும். ஆமென்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE