பாளையங்கோட்டையில் சாராள் தக்கர் பள்ளி உருவானவிதம்!

சாராள் தக்கர் என்பவர் ஒரு மாற்று திறனாளி. கைகள் ஊனமுற்றவர். 14 வயதே ஆன பள்ளி மாணவியாய் இருக்கும்பொழுது, அவரது அண்ணன் ஜான் தக்கர் ஒரு கிறிஸ்தவ மிஷனரியாக தென்தமிழகத்துக்கு வந்தார். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பகுதிக்கு வந்தார். அங்குள்ள சூழ்நிலையை பார்த்த ஜான் தக்கர், தன் சகோதரியான சாராள் தக்கருக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் அவர் எழுதியதாவது,”இந்த தேசத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடம் போகிறது இல்லை. இங்கு உள்ள பெண்கள் படிக்கமாட்டார்களாம். ஆண்களுக்கு மட்டுமே இங்கே கல்வி மேலும் வேற்று ஆண்களை பார்த்தால் இங்குள்ள பெண்கள் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துப்பூட்டி கொள்ளுகிறார்கள். பார்க்கும்பொழுது மிகவும் ஆச்சர்யமாகவும் கவலையாகவும் உள்ளது” என்று.

அக்கடிதத்தை படித்த சாரள் தக்கர் மிகுந்த பாரத்துடன், அவருடைய 100 பவுன் தங்கநகைகளும், மேலும் தன்னுடன் படிக்கும் சகமாணவிகளிடம் 100 பவுன் நகைகளை வசூலித்து, தனது அண்ணனுக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும், ஆசிரியபணிபுரிய ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றையும் ஆரம்பிக்க கேட்டுக்கொண்டார். அப்படியாக 100 வருடங்களுக்கு முன்பதாக உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்திபெற்ற சாராள் தக்கர் பள்ளி மற்றும் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி. இப்படியாக லட்சக்கணக்காணப் பெண்களுக்கு அறிவொளியேற்றிய சாராள் தக்கர் அவர்கள் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவேயில்லை. மேலும் அவர் இந்தியாவிற்கு வந்ததும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளி கல்லூரியில் படித்த பல பெண்பிள்ளைகள் உலகத்தின் பலபகுதிகளில் தலைசிறந்தோராய் காணப்படுகிறார்கள் என்பது நம்மால் மறுக்கமுடியாத உண்மை. நம் தேசத்துப் பெண்களின் வளர்ச்சிக்காக தன் சிறுவயதிலேயே பாரப்பட்டு தன்னுடையவைகளை தியாகம் செய்து, நம் தேசத்துப்பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்ற சாராள் தக்கர் அவர்களின் பெயர் என்றும் அழியாத ஒன்றே!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE