கடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.

தென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கி நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் விசுவாசிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அரசின் விதிகளில், விசுவாசிகள் குறிப்பிட்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பதை நீங்கள் மேலே உள்ள படத்தில் காணலாம், ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் அமரவேண்டும். மிகவும் பெரிய சபைகள் தங்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டன. சுமார் 3,000 வருகிற சபை என்றால் இப்பொழுது 700 பேர் மட்டுமே வரமுடியும் அதுவும் இடம் வசதி குறைவாக இருந்து விசுவாசிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாய் உள்ள சபைகளில் அவர்களின் இடத்திற்கு எவ்வளவு அனுமதிக்கமுடியும் என்பதை அரசங்கத்திடம் தெரிவிக்கவேண்டும்,

மேலும் சபை உறுப்பினர்கள் சேவைக்கு முன் ஆன்லைனில் பதிவு செய்து மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் உள்ள இருக்கைகளில் அமர வேண்டும்.இப்படிப்பட்ட சில விதிகளைத் தென் கொரிய அரசங்கம் செய்துள்ளது.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வருவதற்கு 60% கரணமாயிருந்த “ஷின்ஷியோஞ்சி சர்ச் ஆஃப் ஜிசஸ்” இயக்கத்தின் மூத்த தலைவர் லீ மேன்-ஹீ அவர் வயது 88, மார்ச் மாதம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார், “இது வேண்டுமென்றே இல்லை என்றாலும், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் . நாங்கள் எங்களால் முடிந்தவரை முயன்றோம், ஆனால் அதைத்தடுக்க முடியவில்லை ” என்று அவமானத்தில் முழங்கால்படியிட்டு மன்னிப்பு கேட்டார்.

ஜெபிப்போம் சூழ்நிலைகளைக் கர்த்தர் மாற்றுவார். ஆமென்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE