தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா காலத்தில்,திருவிதாங்கோடு என்னும் ஊரில் கட்டப்பட்டது ஆலயமே அது!
அப்போதைய சேர மன்னன் உதயஞ்சேரல் இதற்கு அமலகிரிஆலயம் என பெயர் வைத்தார், மணவாளக்குறிச்சி பகுதியில் இருந்து கடல் நீர் எடுத்து யானைகளை வரிசையாக நிறுத்தி அந்நீரைக்கொண்டு மங்கலம்படைப்பு செய்துள்ளனர்.
45 அடி நீளம் 16அடி அகலம் 10அடி உயரம் கொண்டு கீறி எடுத்த கருங்கற்களால் கட்டப்பட்டது,
உலகிலேயே கிறிஸ்தவ திருமறைக்கு அமைக்கப்பட்ட முதல் ஆலயம், தோமா அப்போஸ்தலரால் அமைக்கப்பட்ட இந்த திருவிதாங்கோடு ஆலயமே என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தை அரைப்பள்ளி என்று கூறிவந்தனர்.(பள்ளி என்றால் ஆலயம்)
இவ் ஆலயத்தை இன்று சிரியன் ஆர்தடக்ஸ் என்ற பிரிவை சார்தவர்கள் நிர்வாகிக்கின்றனர்,
இவ்வாலயத்தின் அருகில் தோமாவால் திருநிலைப்படுத்தப்பட்ட அரச குலத்தவரான காசீச யாக்கோபு, காசீச_அந்திரேயா ஆகியோரின் கல்லறைகள் உள்ளன.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE