கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் குறித்து ஆராய்ந்தால், அல்லது அப்பண்டிகையை நாம் இன்று கொண்டாடும் விதங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால் நமக்கு வேதனைதான் வரும்.
டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி பகல் பொழுது குறைந்து, இரவு மிக நீண்டதாக இருக்கும் ஒரு நாள். December 25 th is the shortest and darkest day of the year, and the first day in which the days would begin to elongate and the Sun would have a longer presence in the sky.
ரோமர்களுக்குச் சூரியன் ஒரு கடவுள். அவர்கள் சூரியனை வணங்கினார்கள். அவர்கள் நாட்காட்டி சூரியனை அடிப்படையாக கொண்டது – Solar year.
யூதர்கள் சந்திரனை அடிப்படையாக கொண்ட நாட்காட்டியைப் பின்பற்றினர் – Lunar year. ரோமர்களின் பண்டிகைகள் சூரியனைச் சார்ந்தும், யூதர்களின் பண்டிகைகள் நிலவைச் சார்ந்தும் உள்ளன.
இப்போது டிசம்பர் 25 ஆம் தேதி வானியல்படிச் சூரியன் ஒரு நீண்ட பகலில் இருக்கத் தொடங்குவதால் ரோமர்கள் இதை ஒரு பண்டிகையாகக் கொண்டாடினார்கள். அது ” சதுர்னாலியா Saturnalia ” என்ற சூரியக் கடவுளின் பிறப்பைக் கொண்டாடும் பண்டிகையாக இருந்தது. மேலும் இது விவசாயம் சார்ந்த ஒரு பண்டிகையாகும்.
தொடக்க கால யூதர்களும் கிறிஸ்தவர்களும் ரோமர் ஆட்சியில் அடிமைகளாக இருந்தனர். அவர்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடத் தயங்கினார்கள். கொண்டாடினால் அது அந்நிய தெய்வ வழிபாடு ஆகும். கொண்டாடாவிட்டால் தேசத் துரோகம் ஆகும். அதனால் தண்டிக்கப்பட்டுவர்.
இச்சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள். இப்பண்டிகையைத் துணிந்து கொண்டாடினார்கள். அது அந்நிய தெய்வ வழிபாடாக அல்ல. ஆனால் ” நீதியின் சூரியனாகிய ” இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் பண்டிகையாக கொண்டாடினர்.
இவ்வாறாக 300 ஆண்டுகள் சென்றன. அப்போது கான்ஸ்டன்டைன் என்பவர் ரோமப் பேரரசர் ஆனார் ( கி.பி. 306-337 ). இவர் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர் ஆனார். அரசர் கிறிஸ்தவரானதால் நாடு முழுவதும் கிறிஸ்தவ நாடாகியது. திருச்சபை சபையின் சோதனைகள் முடிவுக்கு வந்தன. பேரரசர் டிசம்பர் 25 ஆம் தேதியன்று சூரியக் கடவுள் பண்டிகையைக் கொண்டாடாமல், கிறிஸ்து பிறப்புப் பண்டிகையாக கொண்டாட 336 ம் ஆண்டு ஆணையிட்டார்.
இக்காலத்தில் இருந்த கத்தோலிக்கத் திருச்சபையின் போப் ஜூலியஸ் 1 டிசம்பர் 25 கிறிஸ்து ” பிறப்புப் பண்டிகை ” என்று திருச்சபை சார்பிலகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசருக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்ட ஓர் அறிவிப்பாகும்.
அது சரி. டிசம்பர் 25 ஆம் நாள்தான் கிறிஸ்து பிறந்த நாள் என்று எவ்வாறு கணக்கிட்டார்கள்? தேவதூதன் மரியாவுக்குத் தரிசனமான ” பிரசன்னத் திருநாள் ” Annunciation Day – மார்ச் 25 ஆம் நாள் என்று திருச்சபை நிர்ணயித்திருந்தது. அந்த நாளிலிருந்து ஒன்பதாவது மாதம் டிசம்பர் 25 ஆகும். ஆக ஆண்டவர் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் என்று திருச்சபையும் ஏற்றுக்கொண்டது. இது ஒரு யூகத்தின் அடிப்படையில் ஏற்கப்பட்டதே தவிர உண்மையல்ல. ஆனால் சூரியக் கடவுள் பிறப்பும் டிசம்பர் 25 ஆம் நாள்தான் என்று ரோம வரலாறு கூறுகிறது.
ஆண்டவர் இயேசுவை சொந்த மீட்பராக ஏற்றுக்கொண்ட பேரரசர் கான்டன்டைன் தன் நாட்டு மக்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிறிஸ்து பிறப்புப் பண்டிகையை அறிவித்தார்.
ஆனால் இன்று நாம் கிறிஸ்மஸ் பண்டிகையை எவ்வாறு கொண்டாடுகிறோம ? வீணான ஆடம்பர அலங்காரங்கள், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் மரம், குடில், கேக், புத்தாடைகள், விலை உயர்ந்த உணவுகள், விருந்துக்கள். இவைகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஆகாது. கான்ஸ்டன்டைன் போல் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது உண்மையாகவே கிறிஸ்து நம்மில் பிறப்பார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE