தாமஸ் எடிசன் பற்றிய ஒரு அற்புதமான செய்தி தெரியுமா?

ஒரு நாள் தாமஸ் எடிசன் அவர்கள் தனது வீட்டிற்கு வந்து தனது தாயாரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார் பின்னர் அந்தக் கடிதத்தை தனது ஆசிரியை உங்களிடம் மட்டும் கொடுக்கவேண்டும் என்று சொன்னதாகவும் கூறினார்

அந்தக் கடிதத்தை அவர்கள் மிகவும் சத்தமாக தாமஸ் இடம் படித்தும் காட்டினார்

அந்தக் கடிதத்தை அவரின் தாயார் தனது கண்களில் கண்ணீர் தளும்ப தளும்ப படித்து கூறியதாவது

உங்கள் மகன் ஒரு மேதை ஆனால் எங்கள் பள்ளியில் உங்கள் மகனை பயிற்றுவிக்கும் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதால் நீங்களே உங்கள் பிள்ளைக்கு கற்றுக்கொடுங்கள் என்று சொன்னார்

பல ஆண்டுகளுக்குப் பின்னர் எடிசனின் தாயார் மரித்துப் போனார்கள் ஆனால் எடிசனோ அந்த நூற்றாண்டின் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி ஆனார்

ஒருநாள் எடிசன் தனது அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு மடித்த கடிதத்தை கண்டார் எந்த கடிதத்தை தனது பள்ளி ஆசிரியை தனது தாயாரிடம் கொடுக்க கூறினாரோ அதே கடிதத்தை கண்டார்

அதைப் படித்துப் பார்த்தார் அக்கடிதத்தில் உங்கள் பிள்ளை ஒரு மனநிலை சரியில்லாதவர் ஆகையால் எங்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று எழுதி இருந்தது

அந்தக் கடிதத்தை படித்தவுடன்

எடிசன் மிகவும் கலங்கி தனது நாட்குறிப்பில் தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற மனநிலை சரியில்லாத பிள்ளையை அந்த நூற்றாண்டின் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி ஆக்கினார் அவரது தாயார் என்று எழுதினார்

வார்த்தைகள் மிகவும் வலிமையானது ஆதலால்தான் வேதம் மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளது அதில் பிரிய படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் என்று கூறுகிறது

ஆதலால் தான் நாமும் நமது வார்த்தைகளை மிகவும் தெளிவாக உபயோகிக்கவேண்டும் அது மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE