ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும்
துன்பம் துயர் நீக்கி பொல்லாங்கன் சோதனைகள் போக்கி
அம்பர வாசிகளோ டிதயத்தை இன்ப உறவாக்கி
கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும்
ஜீவ ஆறுதல் பெற்று பிஸ்காவின் சிகரமதனில் உற்று
தேவ நகர் கண்ணுற்றுச் சடலத்தை ஜெகத்தில் எறிந்துவிட்டு
ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே
அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன்