ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக்
காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ யேசுநாதா தீதணுகாத பராபரன் சேய் அல்லோ யேசுநாதா நீர் செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ யேசுநாதா பாதகன் நான் அல்லோ கட்டுண்ண வேண்டிய தேசுநாதா சற்றும்
பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன் யேசுநாதா வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ யேசுநாதா சற்றும்
மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ யேசுநாதா
மத்யஸ்தனாய் எனக்காக வந்தீர் அல்லோ யேசுநாதா இந்த
வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ யேசுநாதா
எத்தனை பாதகம் செய்தவனாகிலும் யேசுநாதா எனை
ரட்சிப்பதுன் கடன் அல்லாமல் ஆர் கடன் யேசுநாதா
சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே யேசுநாதா கெட்ட
சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே யேசுநாதா
சித்தம் இரங்கி எனை முகம் பார்க்கவே யேசுநாதா என்னைத்
தேடி வலிய வரத் தயவானீரோ யேசுநாதா
பத்தம் இல்லாததுரோகி நான் அல்லவோ யேசுநாதா உமைப்
பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ யேசுநாதா
பெத்தரிக்கமான பெருமையினாலே நான் யேசுநாதா கெட்ட
பேயைச் சிநேகித்து இக்கோலம் ஆகினேன் யேசுநாதா
புத்தி யில்லா மிருகம்போல் ஆயினேன் யேசுநாதா மனம்
போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன் யேசுநாதா
சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி யேசு நாதா உன்தன்
சீர்பதம் சாஸ்வதம் சேவை புரியச்செய் யேசுநாதா