ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே
அனுதினம் உன்னை காப்பவர் அவரே
நரகத்தை நோக்கி செல்லும்
நீ போகின்ற பாதையும் தவறே
ஓ ஓ ஓ ஓ வாலிபனே
உன்னை கர்த்தர் அழைக்கிறாரே
கனிகள் கொடுக்க சொன்னார்
நீயோ கனிகள் கொடுக்க மறுத்தாய்
தாலந்துகளும் கொடுத்தார்
அதையும் மண்ணில் மூடி மறைத்தாய்
திரளான மீட்பு உண்டு
மன்னிப்பதற்கு தயவு உண்டு
அவரிடத்தில் கேட்டு நீ பெற்றிடு
வாலிப நாட்களில்
உண்மை தேவனை தேடி வா
ஊழியம் செய்திட
அவருக்கு நீ தேவை ஓடி வா
உன்னையும் பயன்படுத்த
அவருக்கும் சித்தம் உண்டு
உலகிற்கு சாட்சியாய் மாற்றுவார்