ஆத்தும அடைக்கலம் அன்புள்ள யேசுவே
அய்யா புகலிடம் தாரும்
காற்றுப் பெருவெள்ளம்போல் சீற்றங் கொள்ளுது துன்பம் கைகொடுத் தெனை ஆற்ற வாரும்
நீரே என் நம்பிக்கை நீரே என் தஞ்சம்
நீசன் எனக்கு வேறார் அய்யா
சாரும் நிராயுதன் யான் போரில் விழாப்படித்
தாங்கும் உன் மறைவினில் அய்யா
நீதம் கெட்ட பாவியான் நீதி பரி சுத்தமும்
நிறைந்த நீர் எனக்குத்ர வாதி
பாதகத்தால் நிறைந்த பேதையான் கிருபை சத்தியம்
பரிபூரணம் உள்ளோன் நீர் ஜோதி
எந்தப் பாவமும் மூடும் விந்தைக் கிருபை உண்டும்மில்
என் பாவம் தீர்த்தருளும் கோவே
நொந்த எனை நீர் ஆற்றிச் சிந்தையைப் புதுப்பித்து
நோக்கும் அதைத் துய்யதாய் தேவே
சீவ ஊற்றே உம்மில் யான் தெளிந்து குடிப்பேனாக
தீராத தாகங்கள் தீரும் ஓவா நித்தியமட்டாகப் பாவி என் நெஞ்சில் ஊறும் உன்னத அன்பன் யேசு வாரும்