ஐயா உமது சித்தம் ஆகிடவே வேணும்
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும்
ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர்
ஜீவனோ மரணமோ செல்வமோ வறுமையோ
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும்
வசை இசை பகை நேசம் வாழ்வுயர் வதிமோசம்
பசி நிருவாணம் நாசம் பாடு நோயடைகினும்
என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன்
குயவன்கைக் களிமண்ணாய்க் குருவே உமக்கமைவேன் நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே