அன்பு தேவ அன்பு
உன்னை தேடும் அன்பு
உருக்கம் நதி போல உள்ளம் நிறையுமே
கல்மனம் உருகுமே கல்வாரி அன்பிலே
அன்பு தேவ அன்பு
ஓ ஓ அன்பு தேவ அன்பு
பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்ப்பனாய் உன் மீட்பனாய்
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
உன்னை அழைக்கிறாரே சேவை செய்ய
மிக அன்புடன் பின் செல்வாயே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே