அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து வழிந்தோடும்.
திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள் திவிய வரமாக வந்து எனதாகும்
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து சிறுமை செயும் நான் மறைந்து
மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும் மலர் முக சந்தோஷ பண்பும் சுடரா
மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து வளமை வரவே விளைந்த
உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து உனதடிமையாய்ப் பரிந்து எனையாளாய்
உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து உதவு நதியாக வந்த