பாலரே நடந்து வாருங்கள்
காலையில் எழுந்து கூடுங்கள்
சாலவே சீவன் சுகமும்
தந்த தேவனை மைந்தன் யேசுவைச்
சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள்
சிறு கண்கள் இரண்டு தந்தனர்
தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே
சிறு செவி இரண்டு தந்தனர்
தேவன் சொல்லைக் கேட்பதற்குமே
சிறப்புடன் அவர் பதத்தை நோக்கியே
திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள்
சிறிய கால் இரண்டு தந்தனர்
செல்லவே மோட்சப் பாதையில்
சிறு கைகள் இரண்டு தந்தனர்
செய்யவே தேவ ஊழியம்
சீக்கிரம் அந்தப் பாதை சென்று மெய்த்
தேவனைத் தினம் சேவித் தேத்துங்கள்