Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, devaasanapathiyum songs, devaasanapathiyum songs lyrics

DEVAASANAPATHIYUM KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

தேவாசனப்பதியும், சேனைத் தூதரைவிட்டுத்
தேவர் குலமாய் வாரதாரையா? இவர்
தேவ னுரைப்படி,
பாவ வினைப்படி,
ஏவை மனப்படி,
ஆவல் மிகப்படி;
வணங்குங் ஜெகஜோதிப் பொருள் தானையா.

முன்னணி பின்னணியி லோசன்னா! ஓசன்னா வென
ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்
உத்தம நேசனாம்,
சத்திய போசனாம்,
பக்தரின் வாசனாம்;
நித்திய ஈசனாம்;
உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா.

பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
பாவலருடன் வாரதாரையா? இவர்
பசியற்றிருந்தவர்,
பொசிப்பற்றிருந்தவர்,
வசை பெற்றிருந்தவர்,
அசைவற்றிருந்தவர்;
பாவ விமோசன ராசன் தானையா.

சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்
சிங்காரமாய் வாருவதாரையா? இவர்
சீருற்றதிபனாம்,
பேர் பெற்றிறைவனாம்,
பாருற்றதிபனாம்,
வேருற்றெழுந்தனாம்;
சீவ வழி சொல்வரிவர் தானையா.

எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே
குருத்தோலை வீச வாரதாரையா? இவர்
அரிவை பவமற,
பெருமை நிதந்தர,
கிருபை துரந்தர,
அருமை நிரந்தர,
ஏசு கிறிஸ்திறைவர் தானையா.

வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
வஸ்திரமீதில் வாருவதாரையா? இவர்
வல்லவராங் குரு,
சொல் தவறாக் குரு,
நல்லவராங் குரு,
துல்லிய சற் குரு,
வரமிகுந்த சற்குரு தானையா.

 

DOWNLOAD PPT

 

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, devaasanapathiyum songs, devaasanapathiyum songs lyrics
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஆபிரிக்கா நாட்டிற்கு அழைப்பு

லிவிங்ஸ்டன் அவருடைய இருபதாவது வயதில் ...
Read More

ஆரம்ப வாழ்க்கை

1813ம் ஆண்டு மார்ச் மாதம் ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE