எல்லை இல்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரே
மகா ராஜாவே என் இயேசையா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரே
மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்
என்னை வெறுக்கவில்லை
நெரிந்துபோன என் வாழ்வை
முறிந்திட விடவில்லை
ஒன்னுமே புரியலப்பா
என் அறிவுக்கும் எட்டலப்பா
ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா
தாயைபோல தேற்றினத
எப்படி நான் சொல்லுவேன்
ஒரு தந்தையைபோல சுமந்தத
என்னனு நான் சொல்லுவேன்
அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
என்னையும் கைவிடத நேசமே