என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பா
என் கண்ணீரெல்லாம் துருத்தியில் உள்ளதப்பா
கலங்கி தவித்தேன் கதறி அழுதேன்
கர்த்தர் உம் கரத்தால் என்னைத் தாங்கினீர்
வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன்
பிள்ளையின் அழுகுரல் கேட்டீரையா
ஜீவ நீரூற்றை தந்தீரையா
எல்ரோயி நீர்தானையா என்னையும் கண்டீரையா
துக்கத்தில் நான் பிறந்தேன் துக்கித்து நான் அழுதேன்
அடிமையின் விண்ணப்பம் கேளும் என்றேன்
ஆண்டவர் எல்லையை பெரிதாக்கினீர்
யெகோவா நீர்தானையா உயர்த்தி வைத்தீரையா
உள்ளம் உடைக்கப்பட்டேன் ஆலயத்தில் அழுதேன்
இருதயம் உம்மிடம் ஊற்றிவிட்டேன்
உள்ளத்தின் வேண்டுதல் கேட்டீரையா
சாலோம் நீர்தானையா சந்தோஷம் தந்தீரையா
En kanneerukku badhil Song Lyrics Pr. Simeon & Sis. Beulah Simeon Rehoboth Blessing Ministries என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பா