1. விண்னை விட்டிறங்கி வந்து
பூமியிலே உம் மகிமை துறந்து
சேவை பெற அல்ல செய்திட
ஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க
என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கிண்றாரே
நம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை
2. கண்ணீரின் தோட்டத்திலே
என் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்
உம் உள்ளம் சிதைந்து போயினும்
என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே
3. தியாகத்தின் தழும்புகளை
கைகளிலும் கால்களிலும் காண்போம்
சிருஷ்டித்த கரங்களிலே
ஆணிகள் பாய்ந்திட ஒப்புக் கொடுத்தார்
4. சேவை செய்ய அறிந்து நாம்
நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம்
பிறர் தேவைகள் உணர்ந்தே
கிறிஸ்துவையே நாம் சேவிப்போம்
DOWNLOAD PPT