வாரும் நாங்கள் கூடும் நேரத்தில்
மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ
ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம்தீர்க்க வாருமையா
கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே
ஆற்றலின் உறவே அபிஷேகமே
ஆற்றிட வாருமையா
உன்னதமான உயர்வின் உறவே
சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே
பலத்த துருகம் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே