என்னை அழைத்தவர் நீர் அல்லவா
முன் குறித்ததும் நீர் அல்லவா
என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்
எல்லா பாதையிலும்
கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
தேவைகளே என் தேவையானாலும்
தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்
ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
மனிதர்கள் தினமும் மாறினாலும்
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
DOWNLOAD PPT
Songs Description: