என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று
தாசன் எலியா காலத்தில்
காகம் மூலம் போஷித்தீர்
தாசன் மோசே காலத்தில்
மன்னா மூலம் போஷித்தீர்
செருப்பும் தேயவில்லை
துணியும் கிழியவில்லை
உம் அதிசய கரம் நடத்திற்று
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று
இரவில் கிடந்து புலம்பினேன்
நடக்கும்போதும் புலம்பினேன்
வறுமை நினைத்து கலங்கினேன்
நிஜத்தை நினைத்து கதறினேன்
உண்ண உணவும் தந்தீர்
உறங்க இடமும் தந்தீர்
உம் அதிசய கரம் நடத்திற்று
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று
நண்பர்களும் மரித்தனர்
உறவினரும் மரித்தனர்
மரண ஓலம் ஒலித்தன
கல்லறைகள் நிரம்பின
உயிருடன் நான் இருக்கிறேன்
சொல்ல சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று
உயிருடன் நான் இருக்கிறேன்
சாட்சி சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று
DOWNLOAD PPT
Ennidam Ondrum illai Yendru song lyrics chords ppt By Bro .Johnkish Theodore Isaac , Ennidam Ondrum illai Yendru song, Ennidam Ondrum illai Yendru Song Lyrics