என்னில் அன்பு கூர்ந்தீரே
என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)
என்னை தோளில் சுமந்தீரே
என்னை காத்து நடத்துனீரே
நன்றி நன்றி என்று சொல்லுவேன்
நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்றி நன்றி என்று துதிப்பேன்
நன்றி நன்றி என்று உயர்த்துவேன்
1 . என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரே
உமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே
என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீர்
என் சாபங்கள் அனைத்தையும் முறித்தீர்
எனக்காக யாவையும் செய்திட்டீர்
அதிகாரம் யாவையும் கொடுத்தீர்
2 . பெலவீனம் எல்லாமே பெலனாய் மாறியதே
குறைவுடன் இருந்ததெல்லாம் நிறைவாய் மாறியதே
என்னை கரம் பிடித்து நடத்தினீர்
என்னை தீங்குக்கெல்லாம் விலக்கினீர்
என் கால்கள் இடறாமல் காத்திட்டீர்
என்னை உள்ளங்கையில் வரைந்திட்டீர்
3. தலைகுனிந்த இடங்களிலெல்லாம் தலையை உயர்த்தினீரே
சோர்வுற்ற நேரங்களெல்லாம் தேற்றி உதவினீரே
உம வார்த்தையால் என்னை உயிர்ப்பித்தீர்
உம ஆவியால் என்னை நிரப்பினீர்
உம ரத்தத்தால் என்னை மூடினீர்
உம கிருபையால் என்னை சூழ்ந்திட்டீர்
DOWNLOAD PPT
Ennil Anbu Koorndheere Song Lyrics Chords PPT,Pas John Jebaraj , Sam Joel ,Ennil Anbu Koorndheere Song Lyrics ,Ennil Anbu Koorndheere Song Lyrics