எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு
இப்புவியிலே உதித்தார அற்புதந்தானே
மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா
நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார்
மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து
இட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே
கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்
பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும்
அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்த
உச்சித கற்பனை கடந் திச்சையினாலே
துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்து
நிச்சயம் கெட்டுப் போனார்கள்
ரட்சிக்கக்கூடாதென்றாலும்
தாக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப்
பாக்கியங்கள் அனைத்தையும் போக்கடித்துமே
யோக்கியம் தெய்வ புத்ர சிலாக்கியம் எல்லாம் இழந்து
பேய்க்கடிமை ஆட்கள் கேட்டை நீக்குதற் கேலாதென்றாலும்
மேட்டிமை எல்லாம் துறந்து காட்டுக்குள் இருக்கும் அந்த மாட்டுக்கொட்டிலில் பிறந்தோர் ஆட்டுக்குட்டி போல்
பாட்டுக்கிடமாய் உலகை மீட்டுக்கொண்டனந்த மோட்ச
வீட்டுக்குட்படுத்த மாந்தர் நாட்டுக்குள் மரித்துயிர்த்து
DOWNLOAD PPT