எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ
எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ
என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர்
என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை
தூதர்கள் கூடிச் சோபனம் பாடி
நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை
ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வு
பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே
துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும்
இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்
உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதே
பலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன்
கைகளில் எடுத்தென் கண்ணீரைத் துடைப்பார்
ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன்